அரசு அலுவலகத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சலுகை

| | posted on:Resources

சென்னை: அரசு அலுவலகங்களில் பணிபுரியும், பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவக நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக புறப்பட்டு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களுடன் சேர்ந்து வெளியேறுவதிலும், நெரிசலான நேரத்தில் பஸ் மற்றும் ரயில்களில் ஏறிச்செல்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை வெளியிட்ட உத்தரவில்,

அரசுப் பணியில் உள்ள பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும், அலுவலக நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே, அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம்.

மேலும்  இது தொடர்பாக http://thatstamil.oneindia.in/news/2010/04/10/differently-skilled-employees-tamilnadu.html

One thought on “அரசு அலுவலகத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சலுகை”

  1. சரியாகத்தான் சொல்கிறார்.எங்களுக்குத் தமிழகத்தில் உரிமைகள் உண்டு என்று சொல்லி யாரையும் தயவு செய்து ஏமாறச்செய்யாதீர்கள்!இது முடமான என்னுடைய கசப்பான உண்மை.இதில் ஒட்டடைக்குச்சிக்குப் பட்டுக்குஞ்சம் கட்டிவிட்டதைபோல ‘மாற்றுத்திறனாளிகள்’என்ற ஒட்டு கிரீடம் வேறு!இந்த விஷயத்தில் இந்த அரசு தடவிக்கொடுத்து செருப்பால் அடித்துக்கொண்டிருக்கிறது என்பது அனுபவமான உண்மை!

Share Your Thoughts...