இலவச இன்டர்நெட் பயிற்சி

| | posted on:Resources

திருச்சியில் செயல்பட்டு வரும் பகவதி கல்வி மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இணைய தளப்பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இன்டர்நெட் பயிற்சி
பயிற்சியில் இணையதளம் அறிமுகம்,பயன்பாடு, தேடுபொறி, மின் அஞ்சல், வலைப்பூ உருவாக்குதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இப்பயிற்சியில் பங்கேற்க 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். செப்டம்பர் 15ம் தேதிக்குள் பெயர்களை ஸ்ரீ பகவதி கல்வி மையம், ஸ்ரீரங்கம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது ஃபோன்(0431-4346184) மூலமோ பதிவு செய்ய வேண்டும். இந்த அரிய வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, பகவதி கல்வி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.