இலவச நவீன செயற்கை அவயங்கள்

| | posted on:Locomotor disability, Spinal Cord Injury

மாற்றுத் திறனாளிகளுக்கு, இலவச செயற்கை அவயங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முட்டிக்கு கீழ் கைகளை இழந்த மற்றும் முட்டிக்கு கீழ் மற்றும் மேல் கால்களை இழந்த கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, நவீன வகை செயற்கை அவயங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
நவீன வகை செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வரிடமிருந்து சான்று பெற்று, அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலருக்கு உடனடியாக நேரில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், முட்டிக்கு கீழ் கால் இழந்த பணிபுரியும், சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும் நவீன வகை செயற்கை கால்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.இவற்றைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து, சான்று பெற்று தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அலுவலருக்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : http://thinamalar.net/News_Detail.asp?Id=313161