ஊனமுற்றோர் என்ற பெயருக்கு பதில் இனி ‘மாற்றுத் திறனாளிகள்’! - enabled.in

ஊனமுற்றோர் என்ற பெயருக்கு பதில் இனி ‘மாற்றுத் திறனாளிகள்’!

சென்னை: ஊனமுற்றோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களின் ஆவணங்களில் இனி ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு பதில் மாற்றுத் திறனாளிகள் என மாற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

“2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து 2010-2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதல்வர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிற,  ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம், இனி  மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம எனவும், தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம் இனி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம எனவும் குறிப்பிடப்படும்.

மேலும்  இது தொடர்பாக,http://www.sivajitv.com/news/no-more-handicap-hereafter-alternate-skilled-persons.htm

Leave a comment

Share Your Thoughts...