எந்த சூழலிலும் ஜெயிக்கலாம்- நிக்

| | posted on:Success Stories

அந்த இளைஞருடைய பெயர் நிக். இருபத்தெட்டு வயது. நடக்கிறார், சிரிக்கிறார், பேசுகிறார், வாசிக்கிறார், கோல்ப் விளையாடுகிறார். கீழே விழுகிறார், மீண்டும் அவரே சிரமப்பட்டு எழுந்து நிற்கிறார்…
கொஞ்சம் பொறுங்க சார். 28 வயது ஆள் இதையெல்லாம் செய்யறது ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் மகா அதிசயம்மாதிரி சொல்ல வந்துட்டீங்களே!
அதிசயம்தான் சார். இவ்வளவையும் சர்வசாதாரணமாகச் செய்கிற நிக்கிற்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை!
1982-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நிக் பிறந்தபோதே அவருக்குக் கைகள், கால்கள் இல்லை. வெறும் உடம்பு மட்டும்தான். இதற்கு என்ன மருத்துவக் காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
காரணம் கிடக்கட்டும், இந்தக் குழந்தையை இப்போது என்ன செய்வது?
நிக்கின் பெற்றோர் துடித்துப்போனார்கள். “உடம்பில் ஒரு சின்ன ஊனம் உள்ளவர்கள்கூட இயல்பாக வாழமுடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கிறோம், இந்தப் பிள்ளை கையும் காலும் இல்லாமல் எப்படி வளரப்போகிறது? கடவுளே!’
ஆனால் பெற்றோர் அவனை நல்லவிதமாக வளர்க்க முடிவு செய்தார்கள். ஊனமுற்றோர் பள்ளியில் சேர்க்காமல், வழக்கமான பள்ளியில் சேர்த்தார்கள். அப்படி சேர்ப்பதற்கே நிறைய போராட வேண்டியதாயிருந்தது. ஆனால் பள்ளியில் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளானான் சிறுவன் நிக். இந்த கேலியைப் பார்த்த சிறுவன் நிக் தற்கொலை செய்ய முடிவு செய்தான்.
நல்லவேளையாக, நிக் தற்கொலை செய்துகொள்ளவில்லை. “எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்ட எங்க அம்மா, அப்பாவை நினைச்சுப் பார்த்தேன். சாகறதுக்கு மனசு வரலை!’
அதன்பிறகு, நிக் நிறையப் படிக்க ஆரம்பித்தார். அவரைப்போலவே உடல் குறைபாடுகளால் அவதிப்பட்டவர்கள், அதைத் தைரியமாக எதிர்த்து நின்று ஜெயித்தவர்களைப் பற்றியெல்லாம் வசித்து, கேட்டுத் தெரிந்துகொண்டார்.
அப்போதும், அவருக்கு ஒரு சந்தேகம் மட்டும் தீரவில்லை. “என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் நான் ஏன் வாழணும்?’
விரைவில், அந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்தது. நிக் தன்னுடைய ஊனத்தைப்பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதைக் கவனித்த சிலர், “நீங்க இந்த விஷயத்தை மேடையேறிப் பேசணும்’ என்றார்கள்.
அது நல்ல யோசனையாகப் பட, இப்போது நிக் மேடைப் பேச்சாளராகிவிட்டார். அவரது வாழ்க்கை புதிதாகவும் வந்திருக்கிறது. “லைஃப் வித்தவுட் லிமிட்ஸ்’ என்ற தலைப்பில்.
இத்தனை சிரமங்களுக்க இடையிலும் நிக் வெற்றியடைந்தது எப்படி? அதற்கு அவரே சொல்லும் இந்தப் பத்து சூத்திரங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி ஜெயிக்கலாம்:
1. நம் வாழ்க்கைக்கு ஓர் உறுதியான, நிச்சியமான நோக்கம் இருக்கவேண்டும்.
2. நம்முடைய நம்பிக்கையை யாரும் உடைத்தவிடக்கூடாது. அந்த அளவுக்கு நாம்தான் அதற்கு வலிமையூட்டவேண்டும்.
3. கடவுளை நம்பவேண்டும், அவர் நினைத்தால் எதுவும் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.
4. எத்தனை குறைகள் இருந்தாலும் பரவாயில்லை, நம்மை நாமே நேசிக்கவேண்டும், முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும், தாழ்வு மனப்பான்மை கூடாது.
5. சின்ன சின்ன இலக்குகளெல்லாம் வேண்டாம். மிகப் பெரிய லட்சியங்களை மட்டுமே குளி வையுங்கள்.
6. எப்போதும் மாற்றங்களுக்குத் தயாராக இருக்கவேண்டும்.
7. எல்லாரும் நல்லவர்கள்தான், நம்புங்கள்.
8. எந்நேரமும் கண்களை அகலத் திறந்துவைத்திருப்பது அவசியம். நல்ல வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருங்கள்.
9. எதிலும் இறங்குவதற்கு முன்னால் நன்றாக யோசித்துக் கணக்குப்போட்டு அதன்பிறகு முடிவெடுங்கள்.
10. கஷ்டப்படுகிறவர்கள்மீது கருணை காட்டுங்கள், சேவை மனப்பான்மையோடு வாழ்ந்து பழகுங்கள்.

Nick Vujicic own words….

agine being born without arms. No arms to wrap around a friend ; no hands to hold the ones you love; no fingers to experience touch ; no way to lift or carry things. How much more difficult would life be if you were living without arms and hands? Or what about legs? Imagine if instead of no arms, you had no legs. No ability to dance, walk, run, or even stand. Now put both of those scenarios together… no arms and no legs. What would you do? How would that affect your everyday life?

“If just one more person finds eternal life in Jesus Christ….it is all worth it”.  You can help me spread this message today!

Meet Nick Vujicic, pronounced ‘Vooy-cheech’. Born in 1982 in Brisbane, Australia, without any medical explanation or warning, Nicholas Vujicic came into the world with neither arms nor legs. Imagine the shock his parents felt when they saw their first-born brand new baby boy for the first time, only to find he was what the world would consider imperfect and abnormal. Nick Vujicic Childhood A limbless son was not what nurse Dushka Vujicic, and her husband Pastor Boris Vujicic had been expecting. How would their son live a normal happy life? What could he ever do or become when living with such a massive disability? Little did they or anyone else know that this beautiful limbless baby would one day be someone who would inspire and motivate people from all walks of life. God uses Nick to touch lives and bring the hope of Jesus Christ to people across the globe.

Throughout his childhood, Nick dealt not only with the typical challenges of school and adolescence such as bullying and self-esteem issues; but also struggled with depression and loneliness.  He constantly questioned why he was different than all the other kids surrounding him; why he was the one born without arms and legs. He wondered what the purpose behind his life was, or if he even had a purpose. According to Nick, the victory over his struggles throughout his journey, as well as the strength and passion he has for life can be credited to his faith in God. His family, friends and the many people he has encountered along the way have also encouraged him.

Nick Vujicic SkateboardAfter school, Nick went on with further study and obtained a double Bachelor’s degree, majoring in Accounting and Financial Planning from Griffith University in Logan, Australia. By the age of 19, Nick started to fulfill his dream of being able to encourage other people and bring them the gospel of Jesus through motivational speaking and sharing his testimony about how God changed his life and gave him a future and a hope. “I found the purpose of my existence, and also the purpose of my circumstance. There’s a purpose for why you’re in the fire.” Nick wholeheartedly believes that there is a purpose in each of the struggles we each encounter in our lives, and that our attitude towards those struggles, along with our faith and trust in the Lord can be the keys to overcoming the challenges we face.

Now at 28 years old, this limbless young man has accomplished more than most people accomplish in a lifetime. Nick recently made the massive move from Brisbane, Australia to California, USA, where he is the President of an Nick with Kids in Indiainternational 501c3 non-profit organization; Life Without Limbs. Since his first speaking engagement back when he was 19, Nick has traveled around the world, sharing his story with millions of people, speaking to a range of different groups such as students, teachers, youth, businessmen and women, entrepreneurs, and church congregations of all sizes.  He has also told his story and been interviewed on various televised programs worldwide. “If God can use a man without arms and legs to be His hands and feet, then He will certainly use any willing heart!”

The World needs to hear Nick’s life changing message of Hope found in Jesus Christ. Please consider supporting Life Without Limbs today!