கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்

| | posted on:Locomotor disability, Visual impairment

கை, கால் பாதித்த மாற்று திறனாளிகளுக்கு பாலிடெக்னிக் மூலம் 3 மாத மொபைல் போன் சரி பார்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் சேர கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்விரும்புவோருக்கு 40 சதவீதத்திற்கு மேல் உடல் பாதிப்பு இருக்க வேண்டும்.

மேலும் 8ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, வயது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.மேலும் பார்வை திறன் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு 6 மாத கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் மண்டல மையத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியில் சேர பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று 18 முதல் 30 வயது வரையும், 40 சதவீதத்திற்கு மேல் பார்வை திறன் பாதித்திருக்க வேண்டும். பயிற்சிகளுக்கு உதவித் தொகை மாதந்தோறும் 300 ரூபாய் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

Source : http://tamil.yahoo.com/