கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு - enabled.in

கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு

கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடுபள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் உட்பட பல்வேறு வசதிகளை செய்துதர, நடப்பாண்டில் (2010-2011) 39.03 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசாத, இதர குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவர்களுக்கு  நடப்பாண்டு பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
திட்டம், நிதி விவரம்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வழங்க, ஒன்றியத்திற்கு தலா ஐந்து சிறப்பாசிரியரை நியமிப்பது. இலவச மருத்துவ முகாம் நடத்தி, சிகிச்சை அளிக்க ரூ.2.27 கோடி; உதவி உபகரணம், சிகிச்சை செய்ய ரூ.3.88 கோடி; 299 மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதார வள மையங்களை மேம்படுத்த ரூ.2.39 கோடி; 362 பகல் நேர பாதுகாப்பு மையம் நடத்த ரூ.6.51 கோடி; 699 அரசு பள்ளிகளில் கழிவறை வசதிக்கு ரூ.69.90 லட்சம்; 645 அரசு பள்ளிகளில் இம்மாணவர்கள் வந்து செல்ல வசதியாக சாய்தள நடைபாதைக்கு ரூ.51.60 லட்சம்; 23 இடங்களில் உண்டு உறைவிடப் பள்ளி கட்ட ரூ.1.61 கோடி; விடுதியில் தங்கும் 382 மாணவர்களுக்கு ரூ.30.56 லட்சம்; 1,217 மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்க ரூ.13.39 லட்சம் நிதி ஒதுக்கப்படவுள்ளது.

பயிற்சிக்கு ரூ.1.29 கோடி: மாற்றுத் திறனாளிகளுக்கு பாடம் நடத்தும் விதம் குறித்து ஆசிரியர், பெற்றோர் உள்ளிட்டோருக்கு பயிற்சி வழங்க ரூ.1.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாற்றுத்திறன் பயிற்சி, சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.36.20 லட்சம் ரூபாய் என, நடப்பாண்டு திட்டம் செயல்படுத்த மொத்தம் 39.03 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

Leave a comment

Share Your Thoughts...