சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப் - enabled.in

சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற 220 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் மடிக் கணினியுடன் சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்பேசும் சாப்ட்வேர் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பார்வையற்ற பிளஸ் 1, பிளஸ்2 மாணவ, மாணவியருக்கு பேசும் மென்பொருளான ஜாஸ் சாப்ட்வேரை ரூ.44 லட்சம் செலவில் வாங்கி லேப்டாப்புடன் வழங்கப்படும். இந்த ஆண்டு மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்கள் 560 பேருக்கு லேப் டாப் வழங்கப்படும். இதேப்போல, நடப்பு நிதியாண்டு முதல் கல்வி பயிலும் மாற்றும் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் பயனடையும் வகையில் பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 400 ஸ்கூட்டர்கள் ரூ.2 கோடி செலவில் வாங்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்படும்

Leave a comment

Share Your Thoughts...