சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம் - enabled.in

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம்

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம் medical campமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், வரும் 8ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடக்கிறது. கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட மருத்துவ பணிகள் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஸ்ரீ அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, கடந்த மாதம் 23ம் தேதியிலிருந்து நடத்தி வருகிறது. மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, கல்வி உதவி தொகை, அறுவை சிகிச்சை, செயற்கை உதவி உபகரணங்கள் பெற மாற்றுத் திறனாளிகள் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளலாம். வரும் 8ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 13ம் தேதி பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 15ம் தேதி காரமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 20ம் தேதி வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 22ம் தேதி தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 27ம் தேதி மதுக்கரை மார்க்கட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 29ம் தேதி சரவணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. அக்., 4ம் தேதி பேரூர் தமிழ்க் கல்லூரி எதிரில் உள்ள கற்றல் வள மையத்திலும், 11ம் தேதி சூலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 13ம் தேதி சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 18ம் தேதி கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 20ம் தேதி அன்னூர் தெற்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் நடக்கிறது. முகாம்கள் அந்தந்த மையங்களில் காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடக்கிறது. முகாமில், பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகள் பாதிப்பின் தன்மை தெரியும்படி அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேசன் கார்டு அசல் மற்றும் நகல் கொண்டு வருதல் வேண்டும். போட்டோ இல்லாதவர்களுக்கு முகாமில் குறைந்த செலவில் புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டிருக்கும். ரேசன் கார்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், இருப்பிடச் சான்று உள்ளிட்ட ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும். இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். இத்தகவலை கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

நன்றி:  http://www.dinamalar.com/district_detail.asp?id=307735&Print=1

Leave a comment

Share Your Thoughts...