சுயதொழில் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி ரூ.5 லட்சம் வங்கிக் கடன்

| | posted on:Resources

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செயவதற்கு நிபந்தனையின்றி ரூ. 5 லட்சம் வரை வங்கிக்கடன்  வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.  பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவதற்கான சிறப்பு சலுகை விளக்க கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில் சிவகங்கை முன்னோடி வங்கி அலுவலர் ஆர்.பெருமாள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மதுரை காதி கிராமத் தொழில்கள் ஆணைய உதவி டி.வி.அன்புச்செழியன், சிவகங்கை நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் எம்.ஆர்.கோபால், சிவகங்கை மாற்றுத்திறனாளர் நல அலுவலர் சகுந்தலா உள்ளிட்ட அரசுத்துறை  அலுவலர்களும் மாற்றுத்திறன் கொண்டோரும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மாற்றுத்திறனாளர்கள் சுயதொழில் செய்ய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. வங்கி கடன் தொகையில்  5 சதவீத டெபாசிட் தொகையை கடன்பெறுபவர்கள் செலுத்த வேண்டிய நிலை  முன்பு இருந்தது. அந்த  நிலை மாறி தற்போது 5 சதவீத தொகையையும் அரசே செலுத்துகிறது. மேலும் ரூ 5 லட்சம் வரை கடன்பெறுவோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு இச்சலுகைகளை வழங்குகிறது. சுயதொழில் செய்ய வங்கிக் கடன் கேட்டு வரும் மாற்றுத்திறனாளர்களின் வேண்டுகோளை அரசு அலுவலர்கள் விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றார்.

4 thoughts on “சுயதொழில் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி ரூ.5 லட்சம் வங்கிக் கடன்”

 1. Sir, i will get the loan, i am orthopedic disabled of 60%. I was actively Practicing as an Advocate in District Courts, dealing with civil and criminal cases from 29.08.2007 and he met with a road traffic accident on 08.08.2009. Now i am not continue my job. so i have started a new business (travels) i request you to kindly provide a loan Rs.5,00,000. A.Anantharaj, Cell.94422 90441

 2. sir I am physscl handipet, I startet a busseness
  sdutio planning immprove a bussness
  give ajob for moer person I request you to haindly
  provide a lone Rs 500000
  bussness premiss
  jordan
  digital sdutio
  thirumayam main road
  attangudi [630 101} (near karaikudi)

  ph:04565281699
  cell :9003942362

Comments are closed.