சுயம்வரம் நிகழ்ச்சி

| | posted on:Hearing Impairment

சென்னையில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 150-க்கும் சுயம்வரம் நிகழ்ச்சி - differently abledமேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சுயம்வரம் நிகழ்ச்சி

சென்னை சைலென்ஸ் பிரதர் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் (காது கேளாதோர்) தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமல் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

சுயம்வரம் நிகழ்ச்சி தொடக்க விழா பள்ளி கலையரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு உடல் ஊனமுன்றோர் அறக்கட்டளை கூட்டமைப்பு தலைவர் சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். சைலென்ஸ் பிரதர் அமைப்பின் செயலாளர் வெங்கடேசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

வாழ்க்கை துணை

சுயம்வரம் நிகழ்ச்சியில் சேலம், திருச்சி, சென்னை, திருநெல்வேலி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டார்கள்.

ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களின் கடின உழைப்பால் உயர் கல்வி பெற்று, தனியார் நிறுவனங்களில் நல்ல பணியில் இருக்கிறார்கள். ஆனால், மாற்றுத்திறனாளி என்ற ஒரு காரணத்தால் மட்டும் திருமணம் நடைபெறாமல் இருந்து வருகிறது. கண்டிப்பாக நமக்கும் ஒரு வாழ்க்கை துணை கிடைப்பார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் சுயம்வரம் நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். தங்கள் பெயர், முகவரி, பணி, ஊதியம் என அனைத்தையும் கை அசைவுகள் மூலமாக எடுத்துக் கூறினார்கள்.

நல்ல குணம் உள்ளவர்

சென்னை சைதாப்பேட்டை தாடங்கல்நகர் பகுதியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான சுகாசினி (காதுகேளாதவர்) என்பவர் கூறும்போது, “உயர் கல்வி படித்துள்ளேன், தட்டச்சில் லோயர் மற்றும் ஹையர் பயிற்சி பெற்றிருக்கிறேன். தற்போது இந்தி மொழி படித்து வருகிறேன். நடைபெற்று முடிந்த குரூப்-2 தேர்வு எழுதியுள்ளேன். கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன். என்னை நேசிக்கும், என் குடும்பத்தை நேசிக்கும் மனம் கொண்டவராக இருக்க வேண்டும். எனக்குள் குறைகள் இருந்தாலும் பரவாயில்லை. எனது தந்தை என்னுடன் இல்லை என்பதை பெரிதாக பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாத நல்ல குணம் கொண்டவராக இருக்க வேண்டும்” என்றார்.

பெற்றோரின் காட்டும் பாசம்

அயனாவரம் பகுதியைச் சேர்ந்த நிர்மல்ஜோதி என்பவர் கூறும்போது, “பிளஸ்-2 வரை படித்துள்ளேன். நான் எதையும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. என்னை புரிந்து கொள்ள வேண்டும். சேவை உள்ளம் கொண்ட நல்ல நிலையில் துணை கிடைத்தால் சந்தோஷப்படுவேன். என்னைப் போல் உடலில் குறைபாடு உள்ளவராக இருந்தாலும், பெற்றோர் என் மீது காட்டும் பாசத்தையும், அரவணைப்பையும் எனக்கு வாழ்க்கை துணையாக வருபவர் என் மீதும் காட்ட வேண்டும். எனக்கு வாழ்க்கை முழுவதும் ஆதரவாக இருந்தால் போதும்” என்றார்.

நிகழ்ச்சியை சைலென்ஸ் பிரதர் அமைப்பின் உறுப்பினர் சினேகா ஒருங்கிணைத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு இணையான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர். தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்வு செய்தவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.

Share Your Thoughts...