செயல்முறைத் திட்டம் 2011-2012

| | posted on:Multiple Disability

மாற்றுத் திறனாளிகள் நலன்களை தனியாக கவனிக்கவென  1993 ஆம் ஆண்டில் ஊனமுற்றோர்  நலத் துறை சமூக நலத் துறையிலிருந்து பிரித்து tamil nadu government PERFORMANCE BUDGET – 2011-2012 for differently abledஏற்படுத்தப்பட்டது.   அதைத் தொடர்ந்து   1999-ம் ஆண்டு இத்துறை ஊனமுற்றோர் (சமவாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும்      முழு     பங்கேற்பு)    சட்டம்,    1995-ன்படி    ஊனமுற்றோருக்கான    மாநில    ஆணையர் அலுவலகமாக நிலை உயர்த்தப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் தன்னம்பிக்கை பெற்று பொருளாதார நிலையில் தனித்து நிற்கும்  நிலையை அடையச் செய்ய சிறப்புக் கல்வி அளித்தல், வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அளித்தல், பணியில் அமர்த்துதல்,  சுய  வேலை வாய்ப்புக்கு  உதவி அளித்தல், உதவி உபகரணங்களை இலவசமாக வழங்குதல் ஆகியவை  அடங்கிய   விரிவான நலம் அளிப்பதே  இத்துறையின் முக்கிய நோக்கமாகும்.

இத்துறை,    மாற்றுத்    திறனாளிகளுக்கான    மாநில    ஆணையர்    தலைமையின்    கீழ் செயல்பட்டு வருகிறது.    அவருக்கு உதவியாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் துணை இயக்குநர்   மற்றும் ஏனைய  அதிகாரிகளும், மாவட்டங்களில்        மாவட்ட   மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களும் உள்ளனர்.

Download link in Tamil – Click here
Download link in English – Click here