தன்னம்பிக்கையே தாரக மந்திரம்!

| | posted on:Success Stories

பிறப்பாலும், விபத்தாலும் உடல் உறுப்புகளில் மாற்றம் நிகழ்ந்தவர்களை நாம் மாற்றுத் திறனாளிகள் என்கிறோம். தன்னம்பிக்கையே தாரக மந்திரம்!மாற்றுத்திறனாளிகள் என்று சொல்வதில் கூட எனக்கு உடன் பாடில்லை.. உயர் திறனாலிகள் என்றே சொல்லலாம். சராசரி மனிதர்களை விட அதிக கூர்மையான அறிவு படைத்தவர்கள் இவர்கள்.. எண்ணங்களை ஒரு முகப்படுத்தி தாம் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை வெற்றியுடன் முடிப்பதில் இவர்கள் திறமைசாலிகள்.

அந்த வகையில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்து, வாழ்க்கையில் வெறுத்து, துயரத்தின் உச்சத்தை தொட்ட நிலையில் தன்னம்பிக்கையால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று காட்டிக்கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர்.
பெயர் மணிகண்டன்.சொந்த ஊர் சேலம் மாவட்டம் தொப்பூர், உப்பாரப்பட்டி என்ற சிறிய கிராமம். சிறு வயதில் படிப்பை தொடரமுடியாமல், பள்ளி சிறுவர்களுக்கான பாடப் புத்தகங்களை ரயிலில் (Train) விற்று பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தவருக்கு வந்தது சோதனை.

விபத்து(accident)

ஆம். ரயில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்து வருமானத்தையும் இழந்து விட்டார். குடும்பம் மிகக் கடுமையான வறுமையில் சிக்கித் தவித்துகொண்டிருந்த வேளையில் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் மனதில் உறுத்திக்கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் மனம் வெறுத்து வீட்டை விட்டு வெளியேறி

மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்தார்.

திருப்பு முனை: (Turning point)
அங்கே சாலையில் அற்புதமான ஓவியம் ஒன்றைக் கண்டார்.  ஓவியம் தன்னை மிகவும் கவர்ந்திழுக்க, தானும் ஏன் இத்தகைய ஓவியங்களை வரையக்கூடாது?

எண்ணத்தை செயலாக்கினார்.. ஓவியம் வரைந்தவரிடமே மூன்று மாத ஓவியப்பயிற்சி!

பயிற்சிக்குப் பிறகு தன்னிடம் தன்னம்பிக்கை மிகுந்திருப்பதை அவரால் உணர முடிந்தது.

தானும் அவரைப் போலவே ஓவியம் வரைந்து பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார். ஓவிய ரசனையுள்ளவர்கள் ஒவ்வொருவரும் வழங்கும் சன்மானம் இவரின் வருமானம்.

கடவுள்களின் உருவங்களை தத்ரூபமாக வரையும் திறமை இவருக்கு கை வந்திருக்கிறது.

தன்னாலும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று இப்போது நிரூபித்து வருகிறார்.

பலரிடம் கையேந்தி பிச்சை எடுப்பதைக் காட்டிலும் இப்படி ஒரு திறைமையை வளர்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டி இவருக்கு ஒரு சல்யூட்!