தமிழக அரசு – கட்டிட அமைப்பு விதி

அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகளில், மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில், உடனே மாற்றங்கள் செய்ய, நகராட்சி கட்டட விதிகள், Accessible building tamil nadu government தமிழக அரசு - கட்டிட அமைப்புஉள்ளாட்சி கட்டட விதிகளில் மாற்றம் செய்யப்படும் .
மாற்றுத் திறனாளிகள், பல்வேறு பொதுக் கட்டடங்களுக்குச் செல்லும் போது, அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களைய, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு சாய்வு தளங்கள், லிப்ட் போன்றவை இருக்க வேண்டும். அதன்படி, சாய்வு தளங்கள், கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ப அமைத்தால் தான், கட்டட அனுமதி வழங்கப்படும்.

அரசு கட்டடங்கள், பொது இடங்கள், பஸ் நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், உடனே மாற்றம் செய்ய, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகளில், இவற்றை செயல்படுத்தும் வகையில், சிறப்பு அனுமதி பெற, சட்டம் கொண்டு வர உள்ளார். அதனடிப்படையில், நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டட விதிகளில் மாற்றம்  செய்யப்படும்  என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது