மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள்

| | posted on:Resources

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள்

1. மாற்றுத் திறனாளிகளுக்கான “வழிகாட்டும் திட்டம்” செயல்படுத்துதல்
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி,அவை மாற்றுத் திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் தற்போது தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள்குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சமுதாயம் சார்யத மறுவாழ்வுப் பணியாளர்கள் மற்றும்பல்நோக்கு மறுவாழ்வுப் பணியாளர்கள் ஆகியோரை களப் பணியாளர்களாகக் கொண்டு தன்னார்வ    தொண்டு    நிறுவனங்களின்     மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்டம் சீரமைக்கப்பட்டு “வழிகாட்டும் திட்டம்” என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

2. அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுடன் பயணம் செய்யும் துணையாளருக்கு (escort) நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன்பயணம் செய்ய அனுமதி வழங்குதல்
தமிழக அரசு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழக பேருயதுகளில் பயணம் செய்ய ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. உடல்    குறைபாட்டின்   தன்மை காரணமாக துணையாளரின் (escort) உதவியோடு மட்டுமே சிலர் பயணம்   செய்யும்  நிலையில்  உள்ளனர். இத்தகைய   மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இவர்களுடன் பயணம் செய்யும் துணையாளருக்கும் (escort) நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகையுடன்    (இருவருக்கும்) அரசு போக்குவரத்துக் கழக பேருயதுகளில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

3. மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடனுதவிகள்   வழங்க மாநில அரசின் உத்திரவாதத் தொகையை (Government Guarantee) இரண்டு மடங்காக உயர்த்துதல்.
மத்திய அரசின் தேசிய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக்    கழகத்தின்      மாநில   அளவினான    நெறிப்படுத்தும் நிறுவனமாக (State Level Nodal Agency) தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி செயல்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவிகளை வழங்கி வருகிறது. இதற்காக மாநில அரசு ரூ.4 கோடி உத்திரவாதம் அளித்து வருகிறது.கடயத ஆண்டுகளை விட கூடுதல் எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகள் கடனுதவிகளைப் பெறும் வகையில் அரசு உத்திரவாதத் தொகை (Government Guarantee) ரூ.4 கோடியிலிருயது ரூ.8 கோடியாக உயர்த்தப்படும்.

4.   சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு   வழங்கப்படும் மதிப்பூதியத் தொகையை ரூ.3,000/-லிருயது ரூ. 5,000/- ஆக உயர்த்தி வழங்குதல்.

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மனவளர்ச்சி குன்றிய      குழயதைகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும்
சிறப்பாசிரியர்கள் மற்றும்   தசைப்பயிற்சியாளர்கள்     அனைவரையும் தொடர்யது ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது அரசு அவர்களுக்கு மாதம் ரூ. 3,000/-   மதிப்பூதியம் வழங்கி வருகிறது. இயத மாதாயதிர மதிப்பூதியத் தொகை ரூ. 3,000/- லிருயது ரூ.5,000/-  ஆக இயத ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும்.

5. அரசு சிறப்புப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்தல்
மாற்றுத் திறனாளிகளின் தனிப்பட்ட கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அரசு சிறப்புப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

6. மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதி உதவித் தொகையை ரூ.20,000/- லிருயது ரூ. 25,000/-ஆக உயர்த்தி வழங்குதல்.
அனைத்துப் பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கும்       தற்போது திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ்  ரூ.20,000/- வழங்கப்பட்டு வருகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி இயத அரசால் உயர்த்தப்பட்டுள்ளதால், மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண நிதி உதவித் தொகை ரூ.20,000/-லிருயது ரூ.25,000/-ஆக உயர்த்தப்படும். இயத ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து நலத் திட்டங்களிலும்    வருமான    உச்சவரம்பினை முழுமையாக நீக்கி இயத அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகள் பயனடைவர்.

7. அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ / மாணவியருக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசுத் தொகையை மூன்று மடங்காக உயர்த்தி வழங்குதல்.

பார்வையற்ற   மாற்றுத்   திறனாளி    மாணவ    மாணவியரை ஊக்கப்படுத்தும் வண்ணம் அவர்கள் 10 வது மற்றும் 12 வது வகுப்புப் பொது தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு வழங்கப்படும் ரொக்கப்பரிசுத் தொகை இயத ஆண்டு முதல் மூன்று மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

8. மாற்றுத் திறனாளிகளுக்கான துயர் உறுவோர் நிவாரண நிதி கடும் வன்முறைச்    செயல்களால்   பாதிக்கப்படும்  மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட நிவாரண நிதி ஒன்று ஏற்படுத்தப்படும்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமையத மாவட்ட அளவிலான குழு இயத உதவித் தொகையை பயனாளிகளுக்கு வழங்கும்.

9.  அரசு மறுவாழ்வு இல்லங்களில் உள்ள சமையலறைகளை நவீனமாக்குதல்.
தொழுநோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் மறுவாழ்வு அளித்திட 10 மறுவாழ்வு இல்லங்களும் அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம் ஒன்றும் செயல்பட்டு வருகின்றன. இதில் பரனூர்     அரசு    மறுவாழ்வு      இல்லத்தின் சமையலறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அதே போல அனைத்து அரசு மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம் ஆகியவற்றின்
சமையலறைகள் மூன்றாண்டு கால கட்டத்தில் நவீனமயமாக்கப்படும்.

10. மாற்றுத் திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக 1000 சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல்

பொருளாதாரத்தில் பின்னடைவு பெற்ற பல பிரிவினர் சுய உதவி குழுக்கள் அமைத்து பயன் பெற்று வருகின்றனர்.அது போலவே மாற்றுத் திறனாளிகளும் பொருளாதார மேம்பாடு அடைய அவர்களைக் கொண்டு 1000 சுய உதவிக் குழுக்கள் இயத ஆண்டு தமிழ் நாட்டில் அமைக்கப்படும்.

11.  காது கேளாத மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய அரசின் தேசிய நிறுவனங்களின் மண்டல மையங்களை தமிழ்நாட்டில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துதல்.
பல்வகை குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனமும் பார்வையற்ற மாற்றுத்  திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தின் மண்டல மையமும் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இதர வகையான மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனங்களின் மண்டல மையங்களை தமிழ் நாட்டில் அமைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். இதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு வழங்கும்.

12. அரியலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலகங்களை அமைத்தல்

தமிழகத்தில் தற்போது 30 மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள்  நல மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள அரியலூர்      மற்றும்    திருப்பூர் மாவட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலகம்
இயத ஆண்டு அமைக்கப்படும். இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் இல்லாத மாவட்டமே இல்லை என்ற நிலை உருவாகும்.

13. அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள்   நல   அலுவலகங்களுக்கும் ஈப்புகள் மற்றும் கணினிகள் வழங்குதல்
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திட அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களுக்கும் ஈப்புகள் மற்றும் கணினிகள் வழங்கப்படும்.
14. தசைச் சிதைவு (Muscular Dystrophy)பாதிக்கப்பட்டவர்களுக்கு பகல் நேர பராமரிப்பு மையங்கள் அமைத்தல்.
மரபுவழி   நோய்களில்     ஒன்றான    தசைச்    சிதைவு     நோய்,Muscular Dystrophy பாதிக்கப்பட்டவர்களின் தசைச் Physiotheraphy
செயல்பாட்டை படிப்படியாக குறைத்து, அவர்களை முழுமையாக முடக்கி விடுகிறது.இயநோயின்    தாக்கத்தை முறையான தசைப்பயிற்சியின் (Physiotheraphy) மூலமே கட்டுக்குள் வைக்க முடியும். எனவே இயத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான தசைப் பயிற்சி அளிக்கவும், ஆலோசனை வழங்கவும், பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். முதல் கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயத பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும்.

15. ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலிகள் (foldable wheel chairs) வழங்குதல்.

ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும்     கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 150 பேருக்கு    ஒவ்வொரு ஆண்டும் மடக்கு சக்கர நாற்காலிகள் அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இயத ஆண்டு சிறப்பினமாக அதிக மாற்றுத் திறனாளிகள்  இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டும்  என்ற நோக்கத்துடன் 1500 பேருக்கு இலவசமாக மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.
16. மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் வழங்குதல்.
கடும் மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் கை,   கால்களின் தசை   இறுக்கமாக (Spasm) இருப்பதாலும், சிலருக்கு     கழுத்துப்   பகுதி   வளையத நிலையில் இருப்பதாலும், இவர்களது தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் அரசால் 500 பேருக்கு முதல் கட்டமாக வழங்கப்படும்.

17. பார்வை குறைபாடுடைய ஆறு வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளி சிறார்களுக்கான ஆரம்ப நிலை     பயிற்சி    மையங்கள் (Early Intervention Centres) துவக்குதல்
செவித் திறன் குறைபாடுடைய மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி சிறார்களுக்கு ஏற்கெனவே ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இயத ஆண்டு, முதன் முறையாக பார்வை குறைபாடு உடைய ஐயது வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளி சிறார்களுக்காக ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் Early Intervention Centres அரசு சாரா தொண்டு  நிறுவனங்கள் மூலம்  5 மாவட்டங்களில் அமைக்கப்படும். பார்வையற்ற சிறார்கள் மற்ற குழயதைகள் போல சாதாரண பள்ளிகளில் சேர்யது கல்வி பயில தேவையான திறன்களை வளர்ப்பதும், மாற்று   திறனாளிகளின் பெற்றோருக்கும்  குடும்பத்தினருக்கும்  தக்க   ஆலோசனைகள் வழங்குவதும் இயத மையங்களின் நோக்கம் ஆகும்.
18. மன நோயால் பாதிக்கப்பட்டோர்களை மீட்டு மனநோய் மருத்துவ மனைகள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களில் சேர்க்கும் மீட்புத் திட்டம்.
பொது இடங்களில் ஆதரவற்ற நிலையில் திரியது கொண்டிருக்கும் மன நோயாளிகளைக் கண்டறியது உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மனநோய் மருத்துவமனையிலோ அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலம் அரசால் நடத்தப்பட உள்ள பராமரிப்பு இல்லங்களிலோ சேர்ப்பதில் உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு ஒரு மீட்புத் திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும். மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நலன் காக்க இயத ‘மீட்புத் திட்டம்’ அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.

19. ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கு   Early Interventioncentres கற்பித்தல் கருவிகள்     மற்றும் விளையாட்டு உநவேசநள) உபகரணங்கள் வழங்குதல்.
மன வளர்ச்சி குன்றிய மற்றும் செவித் திறன் குறைபாடுடைய மாற்று திறனாளி சிறார்களின் நலனுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் அனைத்து ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கும் (Early Intervention Centres) இயத சிறப்புக் குழயதைகளின் ஆற்றலையும், திறன்களையும் மேம்படுத்துவதற்காக கற்பித்தல்  கருவிகள்   மற்றும்  விளையாட்டு     உபகரணங்கள் வழங்கப்படும்.

20. செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறியும் ஆரம்ப நிலை பரிசோதனை மையத்தை தூத்துக்குடியில் அமைத்தல்.
குழயதை பிறயதவுடனேயே     செவித்திறன்   குறைபாடுகளைக் கண்டறியும் பரிசோதனையும், பின்னர் குழயதை பருவத்தின் போது தொடர் செவித்திறன்       பரிசோதனைகளையும் மேற்கொள்வதும் இக்குறைபாட்டை கட்டுப்படுத்த மிகவும் அவசியமானதாகும். பிறயத குழயதைகளுக்கு உள் ஒலி உணர்வுத் திறன் பரிசோதனை மற்றும் குரலொலிக்கு மூளையின் செயல்பாடு ( Oto Acoustic Emission & Auditory Brainstem Response) போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்ப நிலை பரிசோதனை மையம் (Early Diagnostic Centre) ஒன்று தூத்துக்குடியில் அமைக்கப்படும். பரிட்சார்த்தமான அடிப்படையில் அதன் செயல்பாடுகளைக் கண்டறியத பின்பு, இத்திட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும்.

21.ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் (Early InterventionCentres) பயிலும் செவித்திறன் குறையுடைய சிறார்களுக்கு இரு செவிகளுக்கும் தேவையான காதொலிக் கருவிகள் வழங்குதல்.

செவித்திறன் குறையுடைய இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் (Early InterventionCentres) தற்போது 31 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மூன்று வயதிற்குள் உரிய பேச்சு மற்றும் மொழி வளர்ச்சிக்கான பயிற்சியை அளித்து அவர்கள் 6 வயது அடையும் போது சாதாரணப் பள்ளியில் ஒருங்கிணைத்து பயிலச்செய்வதே இம்மையங்களின்  முக்கிய நோக்கமாகும். இதற்கு, இக்குழயதைகளின் எஞ்சியுள்ள கேட்கும் திறனை (residual hearing) நல்ல முறையில் பயன்படுத்தி இவர்களின் பேச்சு மற்றும் மொழி வளர்ச்சி மேம்படுவதற்கு      இரு   செவிகளுக்கும் தேவையான
காதொலிக் கருவிகள் வழங்கப்படும்.

22. மன வளர்ச்சி குன்றிய சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் ( Early Intervention Centres) பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி (Refresher Course) அளித்தல் தற்போது 30 மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி  மையங்களில் பணிபுரியும்    சுமார் 150  சிறப்பு ஆசிரியர்களின் திறமையை வளர்க்கவும், மறுவாழ்வுத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்த தகவல்களை வழங்கவும் புத்தாக்கப் பயிற்சி (Refresher Course) அளிக்கப்படும்.

23. அனைத்து மாற்றுத்திறன் படைத்த மாணவ மாணவியர்களைப் பள்ளிகளிலும் உள்ளார்யத கல்வி முறை திட்டங்களிலும் சேர்த்தல் 6 வயது முதல் 14  வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளி குழயதைகள் அனைவரையும் இயல்பான கல்வி முறை அல்லது உள்ளார்யத கல்வி முறைத் திட்டங்களில் 100 சதவீதம் சேர்ப்பதற்கான சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.     பள்ளி      செல்லா    மாற்றுத்    திறனாளி குழயதைகளைக்      கண்டறியது     அவர்களை   சாதாரணப்   பள்ளிகள் அல்லது     உள்ளாயத    கல்வித்    திட்ட   மையங்கள்   ஆகியவற்றில் சேர்ப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சேர்க்கை முகாம்கள் நடத்தப்படும்.

24.    மாற்றுத்  திறனாளிகளுக்கு     இயத   அரசின்   சார்பில் வழங்கப்படுகின்ற    உதவிகள்   அனைத்தும்    செம்மையாக  போய் சேருகிறதா என்பதை அறியதிடவும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அயத மாற்றுத் திறனாளிகள் வாழும் பகுதிகளில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அவ்வப்போது தொடர்பு கொண்டு அவர்களுக்கு துணை    நிற்க,  அரசின்   சார்பில்  தேவையான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்.

ref: http://www.tn.gov.in/departments/differently_abled.html

15 thoughts on “மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள்”

 1. Sir I am perumal from cheyyar that tamilnadu government gives all salugaui
  But not gives govt job so pleas give job first

 2. it is ok but the physically challenged person so many people in the sport fild . in state and national and international player is there y ur not proveded to goverment job …………….

 3. my name is k.mohan. i am 21year old . i am also PH 75% and my [qu]is B.SC.PLANT biology & bio technology . and i am international tabel tennes player i want any government job pls pls pls . ph;9176467565

 4. i am a PH person. but now i am working private company, i want bus pass So how i can apply and where i collect the application form. pl reply me soon.
  Thank u sir.

 5. Thanks for usefull information. Can i receive the free bus pass application from for OH candidates? Help me please.

 6. Sir / Madam,
  I finished the B.E (EEE in the year of 2008 and one year experience in TNEB Apprentice training . If you have any vacant in job orientation . please forward to my mail
  Thank you

 7. nice site for me know lot of details from this. me too physically challenged person from jan month

Comments are closed.