திருப்பூரில் மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட மருத்துவ பணிகள் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் சார்பில், நாளை Medical camp for differently abled - திருப்பூரில் மருத்துவ முகாம்பொங்கலூர் பி.வே.கே., பள்ளியிலும், 13ம் தேதி பல்லடம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, அறுவை சிகிச்சை, செயற்கை உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடக்கிறது.
காலை 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடக்கும் அம்முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள், பாதிப்பின் தன்மை தெரியும்படி, சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் 5, ரேசன் கார்டு மற்றும் ரேசன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவைகளுடன் வர வேண்டும்.