திருமண நிதியுதவி – விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்ற நபர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் நல்ல நிலையில் உள்ளவர்களுகுக்கும், மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண நிதியுதவித் தொகை 25 ஆயிரம் (15,500 ரூபாய் ரொக்கமாகவும், 15,500 பத்திரமாகவும்) மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் பயின்ற பெண்களுக்கு 50 ஆயிரம் (25 ஆயிரம் ரொக்கமாகவும் 25 ஆயிரம் பத்திரமாகவும்), திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

கீழ்காணும் தகுதி உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

1. பெண்ணிற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

2. வருமான உச்சவரம்பு இல்லை.

3. முதல் திருமணமாக இருக்க வேண்டும்

4. அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்

5. திருமணத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

6. வேறு எந்த திட்டத்திலும் திருமண உதவித் தொகை பெற்றிருக்க கூடாது.

இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி – மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம் (அறை எண் – 007), தான்தோன்றிமலை, கரூர் – 639007.