திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம்

இளநிலைப் பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளிகளின் திருமண நிதி உதவியை ரூ 25 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தியும், திருமாங்கல்யம் செய்யதிருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம் 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும் முதலமை‌ச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு  வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்‌பி‌ல், 5 திருமணத் திட்டங்களின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.25 ஆயிரம் திருமண நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும், இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தியும் மணப் பெண்ணின் திருமாங்கல்யம செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.
இதைப் போலவே மாற்றுத் திறன் படைத்த பயனாளிகளும் ரூ.25 ஆயிரம் திருமண நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும், இளநிலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தியும், மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்