பார்வையற்றவர்களுக்கான சிறப்பு பொய்க்கால் குதிரை

| | posted on:Visual impairment

இரண்டு மரத்தால் ஆன பொய்க்கால்களைக் கொண்டு நடப்பதற்கு Stilt walk என்று பெயர். இது, தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான பொய்க்கால் குதிரை என்ற நடனத்தை தழுவிய விளையாட்டு IELC பார்வையற்றோர் பள்ளியில் 1983ஆம் ஆண்டு இவ்விளையாட்டு முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விளையாட்டு 6 அடி கொண்ட இரண்டு மரக்கம்புகளைக் கொண்டு அதன் மேல் நடப்பதாகும்.

இதில் பார்வையற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 மாணவர்கள் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு இந்த விளையாட்டில் கலந்து கொள்கின்றனர்.  இவ்விளையாட்டு பார்வையற்ற மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் உடல்ரீதியான உற்சாகத்தையும் பலத்தையும் கொடுக்கிறது. இந்த விளையாட்டு 1983 முதல் 50 மீட்டர் போட்டியாக நடந்துவருகிறது. இவ்வாண்டு இசைக்கு ஏற்றவாறு நடனமாடுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
CBM எனும் சர்வதேச தொண்டு நிறுவனம் ஏழை நாடுகளில் உள்ள மாற்றத்திறனுடையோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. வறுமையே ஊனத்திற்கு காரணமாகவும் பின்விளைவாகவும் அமைகிறது என்பதை மையப்படுத்தி பிற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி அனைவருக்கும் ஏற்ற ஒரு சமுதாயத்தினை உருவாக்கப்பாடுபடுகிறது.

தொலைநோக்குப் பார்வை
ஒருங்கிணைந்த முழுமையான சமுதாயத்திலே மாற்றுத் திறனுடையோர் அனைவரும் தங்கள் திறன்களை முழுமையாக பயன்படுத்தி வாழ்வதோடு, மனித உரிமைகளை முழுமையாக அனுபவிக்கவும், மாற்றுத் திறனுடையோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தாழ்ந்த சமுதாயத்தில் உள்ள மாற்றுத்திறனுடையோருக்காக உதவவும், அவர்களைப் பாதுகாக்கவும் சேவை புரிகிறது. மாற்றுதிறன் உடையோர் கல்விக்காகவும், மறுவாழ்வக்காகவும் மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மாலத்தீவு, கோவா மற்றும் புதுச்சேரியில் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது.

குழந்தைகள் பாராளுமன்றத்தில் மாற்றத்திறனாளிகளையும் ஒருங்கிணையுங்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்குள் இருக்கும் திறமைகளை மதியுங்கள்
உங்களைப் போல் விருப்பும் வெறப்பும் எங்களுக்கும் உண்டு
பள்ளிக்கு செல்ல எங்களுக்கு ஆசை, அது என்னுடைய அடிப்படை தேவை.
ஆட்டம், பாட்டம் கொண்டாட்த்தில் பங்கேற்க எங்களுக்கும் ஆசை
எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும், பெற்றோருக்கு உதவியாகவும் இருக்க எங்களுக்கும் விருப்பம்
நாங்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் , நண்பர்களுடன் தோழமையுடன் இருக்க ஆசை
பள்ளிக்கூடத்திலும், வீட்டிலும், விளையாட்டிலும் மகிழ்ச்சியாக இருக்க ஆசை
எங்களுக்குள் இருக்கும் உறுதி, நீங்கள் எங்களை மறுக்க மாட்டீர்கள்.