முத்தற்ற சிப்பிகள் இரண்டு - பெனோ - enabled.in

முத்தற்ற சிப்பிகள் இரண்டு – பெனோ

முத்தற்ற சிப்பிகள் இரண்டு என்முகத்தில் உண்டு!’ – பெனோ செபினைப் பார்த்ததும் மனதில் தோன்றியது எப்போதோ படித்த இந்த வரிகள்தான்.

”அடிப்படையில் நான் ஒரு மாற்றுத் திறனாளி. எனக்கான உலகம் எப்போதும் கறுப்பாகவே இருக்கிறது. பெற்றோர், அக்கா, மாமா, ஆசிரி யர்கள், நண்பர்கள்… இவர்கள் இல்லாவிட்டால் நான் வெளிச்சத்துக்கு வந்து இருக்க முடியாது. லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் பார்வையற்றோர் பிரிவில் மாநிலத்தி லேயே முதல் இடம் பெற்றேன். ஆனால், அதற் கான அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவில்லை. மற்ற மாணவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டங் கள்தான் எங்களுக்கும். அவற்றைப் படித்து மாநி லத்திலேயே அதுவும் ஒரு பார்வையற்றவர் முதல் இடம் பிடிப்பது என்பது பெரிய விஷயம்.

இந்த சம்பவம் என்னை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. அங்கு ‘உலக இளம் தலைவர்கள்’ மாநாட்டில் கலந்துகொண்டேன். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே மாற்றுத் திறனாளி நான்தான். பார்வையற்ற முதல் இளம் தலைவரா கவும் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கு சுற்றுச் சூழல், கல்வி, இந்தியக் கலாசாரம் ஆகியவற்றைப் பற்றிய எனது பேச்சுக்கு அரங்கத்தில் ஆரவார வரவேற்பு. அந்த ‘ஸ்டாண்டிங் ஒவேஷன்’ என்னை இன்னும் உத்வேகம் கொள்ளவைத்தது.

கல்லூரியில் சேர்ந்த பிறகு தமிழ் மீதும், ஆங்கிலம் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. அதுவரை பொழுது போக்குக்காகப் படித்து வந்தாலும், இலக்கிய வகுப்பில் சேர்ந்த பிறகு இரண்டு மொழி படைப் புகளையும் பொருத்திப் பார்க்கிற வாய்ப்பு எனக் குக் கிடைத்தது. இரண்டிலும் நல்ல ஆளுமை கைவரப் பெற்றது.

இது வரை சுமார் 120 மேடைகளுக்கு மேல் உரை நிகழ்த்தி இருக்கிறேன். மாநில அளவில் தமிழ் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள் தேசிய அளவில் அவ்வளவாக நடத்தப்படுவது இல்லை என்றாலும் காத்திருக்கிறேன். கவிதைகளை எல்லாம் யோசித்து எழுதுவது இல்லை. எல்லாமே ‘ஆன் தி ஸ்பாட்’ தான்!

நிறைய பேருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். வெற்றிக்கு ரகசியம் எல்லாம் என்னிடம் இல்லை. ‘நீங்கள் எப்படியோ… அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இருக்கும் திறமையை வைத்து முன்னேறுங்கள்’ இதுதான் நான் சொல்லும் செய்தி.” கம்பீரமாக வருகின்றன வார்த்தைகள்!

Source : http://www.vikatan.com/article.php?mid=1&sid=21&aid=701

comments save mybox

print A A+
ஸ்டூடன்ட் ஸ்டார்!

‘முத்தற்ற சிப்பிகள் இரண்டு
என்முகத்தில் உண்டு!’
– பெனோ செபினைப் பார்த்ததும் மனதில் தோன்றியது எப்போதோ படித்த இந்த வரிகள்தான்.

”அடிப்படையில் நான் ஒரு மாற்றுத் திறனாளி. எனக்கான உலகம் எப்போதும் கறுப்பாகவே இருக்கிறது. பெற்றோர், அக்கா, மாமா, ஆசிரி யர்கள், நண்பர்கள்… இவர்கள் இல்லாவிட்டால் நான் வெளிச்சத்துக்கு வந்து இருக்க முடியாது. லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் பார்வையற்றோர் பிரிவில் மாநிலத்தி லேயே முதல் இடம் பெற்றேன். ஆனால், அதற் கான அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவில்லை. மற்ற மாணவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டங் கள்தான் எங்களுக்கும். அவற்றைப் படித்து மாநி லத்திலேயே அதுவும் ஒரு பார்வையற்றவர் முதல் இடம் பிடிப்பது என்பது பெரிய விஷயம்.

எனக்குப் பின் வரும் மாணவர்களும் என்னைப் போல பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில், அண்ணா அறிவாலயம் சென்றேன். கலைஞர் அவர்களிடம் என் மனக் குறையைச் சொன்னேன். சில மாதங்கள் கழித்து என் கோரிக்கை சட்டமாகக் கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பவம் என்னை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. அங்கு ‘உலக இளம் தலைவர்கள்’ மாநாட்டில் கலந்துகொண்டேன். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே மாற்றுத் திறனாளி நான்தான். பார்வையற்ற முதல் இளம் தலைவரா கவும் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கு சுற்றுச் சூழல், கல்வி, இந்தியக் கலாசாரம் ஆகியவற்றைப் பற்றிய எனது பேச்சுக்கு அரங்கத்தில் ஆரவார வரவேற்பு. அந்த ‘ஸ்டாண்டிங் ஒவேஷன்’ என்னை இன்னும் உத்வேகம் கொள்ளவைத்தது.

கல்லூரியில் சேர்ந்த பிறகு தமிழ் மீதும், ஆங்கிலம் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. அதுவரை பொழுது போக்குக்காகப் படித்து வந்தாலும், இலக்கிய வகுப்பில் சேர்ந்த பிறகு இரண்டு மொழி படைப் புகளையும் பொருத்திப் பார்க்கிற வாய்ப்பு எனக் குக் கிடைத்தது. இரண்டிலும் நல்ல ஆளுமை கைவரப் பெற்றது.

இது வரை சுமார் 120 மேடைகளுக்கு மேல் உரை நிகழ்த்தி இருக்கிறேன். மாநில அளவில் தமிழ் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள் தேசிய அளவில் அவ்வளவாக நடத்தப்படுவது இல்லை என்றாலும் காத்திருக்கிறேன். இதோ வருகிற டிசம்பர் 19-ல் சேலத்தில் பெரியார் பற்றிய மாநாட்டில் கலந்துகொள்ளப் போகிறேன். கவிதைகளை எல்லாம் யோசித்து எழுதுவது இல்லை. எல்லாமே ‘ஆன் தி ஸ்பாட்’ தான்!

நிறைய பேருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். வெற்றிக்கு ரகசியம் எல்லாம் என்னிடம் இல்லை. ‘நீங்கள் எப்படியோ… அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இருக்கும் திறமையை வைத்து முன்னேறுங்கள்’ இதுதான் நான் சொல்லும் செய்தி.” கம்பீரமாக வருகின்றன வார்த்தைகள்!

ந.வினோத் குமார்

[ Top ]

Leave a comment

Share Your Thoughts...