ரூ.8 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

51 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள். மாற்றுத் திறனாளிகள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் இடத்திற்கு சுலபமாக சென்றுவர பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் உத்தரவின்படி உதவி உபகரணங்கள் கோரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க் உள்ளன. சென்னை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளியில் நேற்று மாலை 4.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவ்விழாவில் செய்தி விளம்பரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் சமூகத்துறை அமைச்சர் செல்வி இராமஜெயம், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டு உதவி உபகரணங்களை வழங்கினார்கள். மேலும், இவ்விழாவில் மயிலாப்பூர், சட்டமன்ற உறுப்பினர் இராஜலட்சுமி, மாற்றுத் திறனாளி நலத்துறை அரசு செயலர் கண்ணகி பாக்கியநாதன் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ப.ரா.சம்பத்தும், சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கே.ஏ.அண்ணாமலை கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
இவ்விழாவில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு கல்வி பயிலும் 29 மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவியின் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களும், 11 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், 10 நபர்களுக்கு சக்கர நாற்காலிகளும், மூளை மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1 நபருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களுடன் துணைக்கு வந்தவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தால் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சீனிவாசன் நன்றியுரை கூறினார்.

source: http://www.thinaboomi.com/2011/09/13/6540.html