வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

| | posted on:Autism, Multiple Disability, Spinal Cord Injury

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு செப். 30-ம் தேதிக்குள் உதவித் தொகை வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது.   வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:   படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் எஸ்.டி. பிரிவினர் உள்ளிட்டோருக்கு தகுதியின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.  அதன்படி, காலாண்டுக்குக்கான உதவித் தொகை செப். 30-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது. இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 2287 பேருக்கு ரூ. 13,08,450, கண்பார்வையற்ற 39 பேருக்கு ரூ. 36,500, மாற்றுத் திறனாளிகள் 167 பேருக்கு ரூ. 3,68,550 உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது என்றார் அவர்.