ஆம்... நம்மால் முடியும் - enabled.in

ஆம்… நம்மால் முடியும்

‘க்கீகீஷ்… க்கீகீஷ்…’ இரும்புக் கம்பிகளை சலவைக் கல் பதித்த தரையில் இழுத்து வரும் சத்தம் கேட்கிறது. இரும்பு வாக்கரைப் பிடித்துக்கொண்டு அங் குலம் அங்குலமாக நகர்ந்து வருகிறார் மாதவி லதா. மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், நீச்சல் பயிற்சியாள ராகப் பரிணமிப்பவர்.

”ஆந்திரா பக்கம் சத்துப்பள்ளிதான் என் சொந்த ஊர். பிறந்த ஏழு மாசத்துல போலியோ பாதிச்சது. 10-வது வரைக் கும் பெத்தவங்க, சகோதரிங்க,தோழிங்க தோள்ல போய்ப் படிச்சேன். இடது பக்கம் சுத்தமா பலம் கிடையாது. அதனால, சரியா நிக்க முடியாது. எங்க போனாலும் தவழ்ந்துதான் போகணும். சின்ன வயசு சந்தோஷங்கள் எதையும் அனுபவிக்கலை. அவ்வளவு கஷ்டத் துக்கு இடையிலும் படிப்பு நல்லா வந்துச்சு. ‘பிரைட் ஸ்டூடன்ட்’னு பேர் வாங்கினேன்.

அப்புறம் தனியா இன்டர்மீடியட் படிச்சேன். காலேஜுக்குப் போற அளவுக்கு உடல்நிலை ஒத்துழைக்கலை. என்னை மாதிரி மாற்றுத்திறனாளிகளுக்கு ஏத்த மாதிரி கல்லூரிக் கட்டமைப்புகளும் இல்லை. பிரைவேட்ல பி.எஸ்.சி. மேத்ஸ் படிச்சு பாஸ் பண்ணேன். அடுத்து என்னன்னு யோசிச்சப்ப, அடுத்தவங்க தயவுல வாழ்ந்தது போதும்… நம்ம வாழ்க்கையை நாமளே தீர்மானிப் போம்னு தோணுச்சு. என் குடும்பம் எனக்குப் பெரிய பலம். எங்கிருந்தோ தேடிப் புடிச்சு என் அண்ணன் ஒரு இரும்பு வாக்கர் வாங்கிட்டு வந்தான். அதைவெச்சு நடக்கப் பழகினேன். அப்பதான் நடக்க ஆரம்பிச்ச குழந்தைகூட என்னைவிட வேகமா நடக்கும். நான் அவ்ளோ மெதுவா நடப்பேன். ஆனா, ‘இதுவே பெரிய விஷயம்’னு டாக்டர்கள் சொன்னாங்க. ‘சாதிச் சிருவோம்’னு எனக்கே நம்பிக்கை வந்தது அப்பதான்.

எல்.ஐ.சி-யில வேலைக்காக விண்ணப்பிச்சேன். அவங்களோட எல்லா தேர்விலும் பாஸ் ஆனேன். நேர்முகத் தேர்வுக்குக் காத்திருந்தேன். ஆனா, என்னைவிட மார்க் கம்மியா வாங்கினவங்களுக்கு ஹால் டிக்கெட் வந்துச்சு. எனக்கு வரலை. விசாரிச்சா, என்னை மாதிரி ஆளுங்க அந்த வேலைக்கு சரிவராதுன்னு சொல்லிட் டாங்க. நொறுங்கிப் போயிட்டேன்!

‘ஒரு வாய்ப்பு போனா, இன்னொரு வாய்ப்பு வரும்’னு சொல்வதில் எனக்கு நம்பிக்கை உண்டு. மனசைத் தேத்திக்கிட்டு பேங்க் எக்ஸாம் எழுதினேன். கோச்சிங் கிளாஸ் எதுவும் போகலை. 200-க்கு 196 மார்க்! ஆனா, மெடிக்கல் டெஸ்ட்ல ‘நாட் எலிஜி பிள்’னு சொல்லிட்டாங்க. இந்த முறை ஏமாற்றம் வரலை. கோபம் வந்துச்சு. ‘நாமளா… இந்த உலகமா’ன்னு போராடிப் பார்க்குற வெறி உண்டாச்சு. நீண்ட போராட்டத்துக்கு அப்புறம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத்’ல வேலை கிடைச்சது!” என்கிறவரைத் தலை தடவி வாஞ்சையாகப் பார்க்கிறார் அவரது தந்தை பார்த்தசாரதி ராஜு. ”கிளர்க்கா வேலைக் குச் சேர்ந்தவளுக்கு அப்போ அசிஸ்டென்ட் மேனேஜர், டெபுடி மேனேஜர் பதவிகள் தேடி வந்தன!” ராஜு எடுத்துக் கொடுக்க… தொடர்கிறார் மாதவி லதா.

”ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பச் செய்றதுல விருப்பம் இல்லை. வேலை பார்த்துக்கிட்டே டிரேடிங், ஷேர் மார்க் கெட் தொடர்பா படிச்சேன். தனி ஆளா பிழைச்சுக்கலாம்னு நம்பிக்கை வந்தது. அரசாங்க வேலையையும் ஆந்திராவையும் விட்டுட்டு, சென்னை வந்துட்டேன். எல்லாம் நல்லா போயிட்டிருந்த நேரம், திடீர்னு முதுகெல்லாம் ‘விண் விண்’ணுனு வலியெடுக்க ஆரம்பிச்சது. நாளாக நாளாக வலி தாங்க முடியலை. சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ‘மிஞ்சிப்போனா ஆறு மாசம். அப்புறம் ரொம்பவே கிரிட்டிக்கல்’னு சொல்லிட்டாங்க. அப்ப ஆனந்த ஜோதிங் கிற பிஸியோதெரபிஸ்ட் மூலமாஹைட்ரோ தெரபி எடுத்துக்கிட்டேன். நீச்சல் அடிப்பது தான் ட்ரீட்மென்ட். தரையில தவழ்ந்து நீருக்குள் விழுந்து கையையும் காலையும் அலையவிட்டு நாலு மாசத்துல நீச்சல் கத்துக்கிட்டேன். எனக்கு நானே டீச்சர். நீச்சல் பழகப் பழக… என் உடல், மன வலி எல்லாம் விடுபட ஆரம்பிச்சது. நீச்சல் அவ்வளவு நல்ல ஒரு எக்சர்சைஸ். அது என்னை ‘கார்ப்பரேட் ஒலிம்பியாட்’ போட்டியில் வெண்கலப் பதக்கம் ஜெயிக் கும் அளவுக்குத் தயார்படுத்திருச்சு.

வெளிநாடுகள்ல மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் சார்ந்த விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இருக்காங்க. நம்ம நாட்டுல ஏன் பாராலிம்பிக், அபி லிம்பிக் பத்தி யாரும் யாருக்கும் சொல்லித் தர்றதில்லைன்னு தோணுச்சு. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு விளையாட்டுப் பள்ளியைத் தொடங்க ஆசைப்பட்டேன். அதற்கு முதல்கட்டமா தமிழக விளையாட்டுத் துறைக்குச் சொந்தமான ஒரு நீச்சல் குளத்தில் மாற்றுத் திறனாளிகளுக் குப் பயிற்சி வழங்க அனுமதி வாங்கினேன். என்னைப்போல சில மாற்றுத்திறனாளிகளுக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்தேன். தயக்கத்தை, அவநம்பிக்கையை உடைக்குறதுதான் முதல் வேலை. அதனால கல்லூரிகள், மன்றங்களில் நடக்குற கூட்டங்களுக்கு போய்ப் பேசிட்டு வர்றேன். கார் ஓட்டவும் கத்துக்கிட்டேன். வலைப்பூவிலும் எழுதத் துவங்கினேன்.

வீடு, நண்பர்கள், அலுவலகம்னு என் லட்சியத்துக்காக நிறையப் பேர் ஆதரவா நிக்குறாங்க. சந்தோ ஷமா இருக்கு. எனக்கு ஒரே ஆசை தான். நான் தவறவிட்ட எதையும் என்னைப்போல இருக்கும் மற்றவர்கள் தவறவிடக் கூடாது. உங்களுக்கு நான் சொல்ல விரும்புறது இது தான்…

‘Yes we too can!’ ”

Source : http://www.vikatan.com/article.php?mid=1&sid=266&aid=9672

Leave a comment

Share Your Thoughts...