ஊனமுற்றோருக்கு-அரசாங்கத் திட்டங்கள் - enabled.in

ஊனமுற்றோருக்கு-அரசாங்கத் திட்டங்கள்

உடல் ஊனமுற்றோருக்குத் தேவையான உபகரணங்களை வாங்க / பொருத்த உதவுதல் ஏழ்மை நிலையிலிருக்கும் ஊனமுற்றோருக்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்க உதவுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். நீடித்து உழைக்கக்கூடிய எளிமையான நவீனமான, தரமான உபகரணங்கள் வாங்க உதவுவதன் மூலம் ஊனமுற்றவர்களின், உடல் நிலையையும், மனநிலையையும் சமுதாய நிலையையும், இத்திட்டம் உயர்த்துகிறது. மேலும் அவர்களுடைய ஊனத்தினால் ஏற்படும் துன்பத்தைக் குறைத்து பொருளாதார ரீதியிலும் மேம்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் தரப்படும் உபகரணங்கள் யாவும் இந்திய தரச்சான்று (ISI) பெற்றிருத்தல் அவசியம்.
உடல் ஊனமுற்றோருக்குத் தேவையான உபகரணங்களை வாங்க / பொருத்த உதவும் திட்டத்தின் கீழ் செய்யப்படும் மொத்த உதவிகளும், அவ்வுதவிகளைப்பெறத் தகுதியான வருமான வரம்பும்:
மொத்த வருமானம்                   உதவித்தொகை
(i)    மாதம் ரூ 6500 வரை                (i)    உபகரணத்தின் மொத்த விலை
(ii)   மாதம் ரூ 6,501 முதல் ரூ 10,000 வரை     (ii)      உபகரணத்தின் விலையில் 50 சதவிகிதம்
இத்திட்டம் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) இவ்வமைச்சகத்தின் கீழ் இருக்கும் தேசிய நிறுவனங்கள் (National Institutes under this Ministry) மற்றும் ALIMCO (a PSU).
ஊனமுற்றோருக்குத் தரப்படும் தேசிய உதவித்தொகைத்திட்டம்
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் முயன்று படித்து வரும் முதுநிலை மெட்ரிக் தொழில் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு 500 புதிய உதவித் தொகை உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் அப்படிப்பின் காலம் ஓராண்டுக்கு மேல் இருக்க வேண்டும். மூளை முடக்குவாதம் (cerebral palsy), மூளைத்திறன் குறைந்தோர், ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுடை
யோர், அதிகமாக செவித்திறன் குறைந்தோர் போன்றோருக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்தே அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சகத்தின் இணைய தளத்திலும், முன்னணி தேசிய மற்றும் வட்டார செய்தித் தாள்களிலும் உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை வரவேற்று ஜூன் மாதத்தில் விளம்பரங்கள் தரப்படுகின்றன. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தை விளம்பரப்படுத்த வேண்டப்பட்டுள்ளன.
40 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஊனமுடையோர், குடும்ப வருமானம் ரூ.15,000/-க்கு மேற்படாதோர் உதவித்தொகை பெற தகுதியுடையவர்களாவர்.
தொழில் துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களில் வீட்டிலிருந்து வருபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.700/-ம், விடுதியில் தங்கிப் பயில்வோருக்கு மாதம் ரூ.1000/-ம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. தொழில் துறை சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு, வீட்டிலிருந்து வருவோருக்கு ரூ.400/-ம், விடுதியிலிருந்து கற்போருக்கு ரூ.700/-ம் மாத உதவித் தொகைகளாக வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.10,000/- வரை கல்விக் கட்டணத்திலிருந்து மாணவர்களுக்கு திரும்பத் தரப்படுகிறது. பார்வையற்ற மற்றும் செவித்திறனற்ற தொழில் துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாற்று மென்பொருளுடன் (editing software) கணிணி வாங்கவும் நிதியுதவி செய்யப்படுகிறது. மேலும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் ஆதார மென்பொருளுடன் (support access software) கணிணி வாங்கவும் நிதியுதவி செய்யப்படுகிறது.

Join the Conversation

1 Comment

Share Your Thoughts...

  1. சரியாகத்தான் சொல்கிறார்.எங்களுக்குத் தமிழகத்தில் உரிமைகள் உண்டு என்று சொல்லி யாரையும் தயவு செய்து ஏமாறச்செய்யாதீர்கள்!இது முடமான என்னுடைய கசப்பான உண்மை.இதில் ஒட்டடைக்குச்சிக்குப் பட்டுக்குஞ்சம் கட்டிவிட்டதைபோல ‘மாற்றுத்திறனாளிகள்’என்ற ஒட்டு கிரீடம் வேறு!இந்த விஷயத்தில் இந்த அரசு தடவிக்கொடுத்து செருப்பால் அடித்துக்கொண்டிருக்கிறது என்பது அனுபவமான உண்மை!

%d bloggers like this: