திரு.மதியழகன் - வாய்ப்புகள் வேண்டும் திறனை வெளிப்படுத்த! - enabled.in

திரு.மதியழகன் – வாய்ப்புகள் வேண்டும் திறனை வெளிப்படுத்த!

differently abledஎன் பெயர் மதியழகன்,  நான் பெங்களுரில் வசித்து வருகிறேன். எனக்கு உடலில் ஊனம் இருக்கிறது. அந்த ஊனத்தை நான் எதிர்கொண்டு பல்வேறு துறைகளில் பணிபுரிந்து இப்போது சிபிஎம்(CBM) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய வேலை என்னவென்றால் பல ஊனமுற்றோர் மக்களை சமுதாயத்தில்  ஒருங்கிணைத்து அவர்கள் எப்படி வாழ முடியும், அவர்கள் வாழ்வதற்கு எவ்வாறு வழிவகுக்க முடியும் என்று பயிற்சி அளித்து வருகிறேன்.  நான் பல நிறுவனங்களோடு இணைத்தும் இதை செய்து வருகிறேன். பல மாற்றுத்திறனாளிகளை பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அலேசானை வழங்கி வருகிறேன். இந்த வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளில் வேலை செய்ய விருப்பப்படுகிறார்கள் ஆனால் வாய்ப்புகள் இல்லை,  வாய்ப்புகள் எதினால் இல்லை என்றால் அடிப்படை காரணம் படிப்பு. படிக்க வாய்ப்பு இல்லை, படிக்க கூடிய வாய்ப்புகள் இருந்தாலும்  80  சதவீதத்தினர் 8வகுப்பு 9வகுப்பு கூட படிக்க முடிக்க முடியவில்லை. இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் பள்ளிகளில் அடிப்படை வசதியில்லை. கணக்கெடுப்பில் 8வது மற்றம் 9வது வகுப்பில் பெண்கள் படிப்பை இடையில் விட்டுவிடுகிறார்கள் காரணம் முக்கியமாக கழிவறை வசதியில்லை, இதிலும் பெண்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சக்கர நாற்கலி உபயோக்ப்படுத்தினால் கூட நாற்காலி பயன்படுத்தா முடியாத நிலை இன்று இருக்கிறது. இப்படி பட்ட சுழ்நிலையிலும் கடினப்பட்டு கல்லூரி வெற்றிகாரமாக முடித்தாலும் கூட இன்று வேலை செய்யும் இடங்களில் அதே பிரச்சனைகளை சந்திகிறார்கள். பல நிறுவனங்கள் மாற்றுத்திறானிகளை ஒதுக்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு மாற்றுத்திறானிகளின் திறமையை கண்டுக்கொள்வதில்லை காரணம் அவர்களுக்கு ஊனத்தை மட்டுமே பார்கிறார்கள். முடியாது என்பது எங்களுக்கு பிடிக்காத வார்த்தை காரணம் நாங்கள் குழந்தை பருவம் முதல் பல நிலைகளில் பல துன்பங்களை போரடி சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களால் எப்படி முடியாது என்று செல்ல முடியும். வாய்ப்புகள் இல்லமை எங்களுக்கு முக்கிய காரணம்.
நேர்காணல் : www.enabled.in லிருந்து

நான் செல்வது என்னெவென்றாலல் நாம் அனைவரும் ஒன்றுகூடி நமக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற வேண்டும். எங்களுக்கு ஊனமுற்றோர் என்ற பெயரை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என்று சென்னால் மட்டும் போதாது எங்களுக்கு வாழ்கை திறன் மாற வேண்டும், வாழ்கை திறன் மாற வேண்டும்என்றால் வாய்ப்புகள் வேண்டும் வாய்ப்புகள் இருந்தால் தான் எங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த முடியும். நான் அனைவருக்கும் செல்வது என்னவென்றால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் நல்லதொரு வேலையில் அமர்ந்து தங்களுடைய பொருளதார வசதியை மேம்படுத்த வேண்டும் அவ்வாறு மேம்படுத்தினால் தான் இன்று சமுதாயத்தில் நாம் சமமாக வளம் வர முடியும்.  நான் வெளிநாடுகளுக்கு சென்று பார்த்த போது அங்குள்ள மாற்றுத்திறானிகள் அனைத்து இடங்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமல் அவர்களது வேலையை அவர்களாகவே செய்கிறார்கள் ஆனால் இந்தியாவில் நமக்கு ஊனமே பெரிய பிரச்சனையாக இருக்கும்போது இதைவிட பொய பிரச்சனையான கல்வி மறறும் பொருளாதரத்தை எவ்வாறு நாம் மேற்கொள்ள முடியும், அவர்கள் ஊனத்தை தண்டி சென்றுகொண்டிருக்கிறார்கள் ஆனால் நாம் இன்னும் அதை தாண்டி செல்ல முடியவில்லை. நாம் அதை தாண்டி சென்று பெரிய பெரிய சாதனைகளை முடிக்க வேண்டும். அனைவரும் ஒன்றுகூடுவோம் வெற்றியை பெறுவோம்.

நேர்காணல் : www.enabled.in லிருந்து

Leave a comment

Share Your Thoughts...