மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி மையம் - enabled.in

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி மையம்

தேனி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் மற்றும் பகல் நேரக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:​ மாவட்ட ஊனமுற்றோர் அறக்கட்டளை சார்பில் தேனி என்.ஆர்.டி.​ அரசு மருத்துவமனை வளாகத்தில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப காலப் பயிற்சி மையம் mentalyillfoto3தொடங்கப்பட்டுள்ளது.​ இங்கு 6 வயது வரையுள்ள மன வளர்ச்சி குன்றிய,​​ மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை வாழ்க்கைக் கல்வி,​​ தசைப் பயிற்சி,​​ யோகா பயிற்சி,​​ மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.​ பயிற்சிக்கு வரும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும்.​ குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும்,​​ சின்னமனூரில் பஸ் நிலையம் பின்புறமுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பகல் நேரக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு பயிற்சிக்கு வந்து செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு,​​ பஸ் கட்டணத்துக்கு மாதம் ரூ.300 வழங்கப்படும். மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள் பயிற்சி மையம் மற்றும் காப்பகத்தில் குழந்தைகளின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று ​ தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment

Share Your Thoughts...