மோட்டார் மூன்று சக்கர வண்டிகள் - enabled.in

மோட்டார் மூன்று சக்கர வண்டிகள்

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான மோட்டார் பொருத்திய பேட்டரியில் இயங்கும்  மூன்று சக்கர வண்டிகள்

திட்டத்தின் சுருக்கம்

கடுமையாக  பாதிக்கப்பட்ட  மாற்றுத்  திறனுடைய  மாணவ,மாணவியருக்கு  (இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள) மோட்டார் பொருத்திய வண்டி இலவசமாகவும், பணிக்குச் செல்லும் கடுமையாக பாதிக்கப்பட்ட  மாற்றத் திறனுடையவர்களுக்கு  (இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள)    மோட்டார்  பொருத்திய வண்டி வாங்கிட வண்டியின் விலையில் 30 விழுக்காடு அல்லது ரூ.10,000/-    இவற்றில்    எது குறைவோ அத்தொகை மான்யமாக வழங்கப்படுகின்றது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/ நிபந்தனைகள்


சம்பந்தப்பட்ட மாவட்டம்/பகுதியைச் சேர்ந்த மாணவர்/பணிபுரிவோர்/சுய தொழில் புரிவோர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர்களாகவும்,    18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?


ஆம்.சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்


தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, கல்வி நிறுவனம்    அல்லது     பயிற்சி    நிலையத்தில்    இருந்து சான்றிதழ் / பணிபுரிவோர்/ சுய  தொழில் புரிவோர் நிறுவன சான்றிதழ்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்


மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

மாவட்ட ஆட்சித் தலைவர்

MOTORISED BATTERY OPERATED TRICYCLES

1.Gist of the SchemeMotorised Battery Operated Tricycles are provided at

free of cost for Severely affected differently abled Students, working Differently Abled persons and self employed Differently Abled persons.

2.Eligibility CriteriaThe age of the beneficiary should be more than 18

years. The Candidate should be Severely affected differently abled student / working / Self employed person and resident of the district/area

Having disability of 75% and above.

3.Whether form of application is prescribed and particulars to be

furnished

Yes. Applications are available with concerned District

Differently Abled Welfare Officer.

4.Certificates to be furnishedNational Identity Card for the Differently abled and

Certificate from Head Master/ Principal /Employer

5.Officer to whom the application is

to be submitted

District Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be addressed to

State Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road,

Thousand Lights, Chennai-600 006.

Leave a comment

Share Your Thoughts...