3 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம்-ஐகோர்ட்

| | posted on:Multiple Disability

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் : ஐகோர்ட்

அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. கரூரை 3 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம்சேர்ந்த சிவக்குமார் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: நான் தோட்டக்கலை பட்டயப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். 40 சதவீத உடல் ஊனமுற்றவன்.

கடந்த ஆண்டு உதவிவிவசாய அதிகாரி பதவிக்கு ஆள் எடுக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இந்த ஆண்டும் உதவி விவசாய அதிகாரி பதவிக்கு ஆள் எடுக்கப்பட்டது. அதிலும் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருந்தால் எனக்கு வேலை கிடைத்திருக்கும். 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து, உதவி விவசாய அதிகாரி பணியிடத்துக்கு மனுதாரரின் பெயரை பரிசீலனை செய்து பணி வழங்க வேண்டும். மேலும் அரசு பணியிடங்களில் உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் அளிக்க வேண்டும். தமிழக வேளாண்துறையில் ஊனமுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்காதது வேதனை அளிக்கிறது என¢றார். மனுதாரர் சார்பாக வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார்.