சென்னை சமூக சேவை ஆர்.சத்யா

| | posted on:Success Stories

ஆர்.சத்யா, மாற்றுத்திறனாளியான இவர் சென்னை வாசி. சிறுவயது முதல் பல துன்பங்களை சந்தித்த போதும் இவரது அன்னையிSATHAYAன் அரவணைப்பாலும் ஊக்கத்தினாலும் இவர் தன்னை தானே உயர்த்திகொண்டார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நெடியும் பல இன்னல்களை
சந்தித்த போதும் தன்னை ஒரு திறனாளியாகவே வெளிக்காட்டி வந்துள்ளார். இவர் மேலண்மையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். தன்னை மிகச்சரியான நேரத்தில் வெளிப்படுத்துவதில் திறமைவாய்ந்த இவர் இருசக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார். மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று தனது திறமையை வெளிக்காட்டுகிறார். இது தவிர இளைநர்களுக்கு ஊக்க உரை நிகழ்த்துவதிலும், வாழ்கையை எவ்வாறு சிறப்பாக கொண்டு செல்வது என்பதை பற்றியும் இளைநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவர் மாற்றுத்திறானளியானலும் தனது உறுப்புகளை தானம் செய்து, தனது குடும்பத்தினரையும் தானம் செய்ய வைத்துள்ளார்.

விஜய்,  சன், ராஜ் போன்ற தொலைக்காட்சிகளில் புகைப்பட துறையிலும் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டுவதில் சிறிதும் தவறவில்லை. இவர் சமுதாயத்தின் மீதுள்ள மோகத்தால் Share your living, man & Mission, Wheelchair, என் பெயர் மரம் நான்கு குறும்படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் இவர் சென்னை சமூக சேவை (Chennai Social Service) என்ற நிறுவனத்தில் ஊடகம்(Media & Marketing) என்ற பெறுப்பில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். இந்நிறுவனம் சுமாராக 2000 உறுப்பினர்களை கொண்டுள்ளது. சென்னையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த சேவை நிறுவனம் பல மறுப்பட்ட நிலையில் சேவை செய்து வருகிறது. இதில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தி வருகின்றனார்.

இவருக்கு பிடிக்காத வார்த்தை “படிக்கட்டுகள்” பிடித்த வார்த்தையும் “படிக்கட்டுகள்” தான். முடியாது என்ற வார்த்தையை தன்னில் இருந்து அகற்றி தற்போது வெற்றிகரமாக, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வருகிறார்.

நாம் ஒவ்வொரு இன்னல்களையும் படிகட்டுகளாக மாற்றி இவரை போல வெற்றியை  நாமதாக்குவோம்.

நேர்காணல் – www.enabled.in ல்லிருந்து.

2 thoughts on “சென்னை சமூக சேவை ஆர்.சத்யா”

  1. hi satya really u great . I would like to start Social service but but i dont know how to get liecence.now we are 10 people doing for service to childrens and poor family like this.pls give some idia for get liecense.
    My No -9944225630.

Comments are closed.