I am Khadar Gani… - enabled.in

I am Khadar Gani…

தன்னை தானே வெற்றிக்   கொண்டவர்களை பார்ப்பது அரிதான ஒன்று, அத்தகைய மனிதரை சென்னையில் உள்ள ஸ்பென்சர் வணிக வளாகத்தில் சந்திக்க நேர்ந்தது. அவர் தன்தை பற்றி கூறியபோது,

எனது பெயர் காதர் கனி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தேன். எனது குடும்பத்தில் ஐந்து சகோதர்கள் உள்ளனர். நானும் எனது மூன்றாவது சாகோதரரும் குள்ளமானவர்கள் (midgets).  நான் எனது சிறிய வயதிலிருந்தே பல துன்பங்களுக்கு சொந்தமானவன். படிப்பும் எனக்கு அப்போது தூரமாகவும், படிக்க அசையிருந்தாலும் படிக்க சென்றால் பலரது கேளிக்க பொருளாக வேண்டி அதை நான் வெறுத்தேன். எனது குடும்பத்தில் கடினமான சூழ்நிலையின் காரணமாக நான் வேளைத்தேடி அலைந்தேன். யாரும் எனக்கு வேலை தர முன்வரவில்லை.  எனக்கென்று பல கனவுகள் இருந்தது, ஆனால் அதை இன்றுவரை நிறைவேற்ற இன்றுவரை இயலவில்லை.  11 வருடம் பெட்டிகடையில் வேலை செய்துவந்தேன். எனக்கு மற்றவர்களை போல விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையின் காரணமாக அந்தமானுக்கு வேலைக்கு சென்றேன். பலருக்கு அது கேலியாக இருந்தாலும் எனது உணர்ச்சிகளுக்கு யாரும் மதிப்பு தரவில்லை, கடினபட்டு அங்கு சென்று சுமார் 5 வருடம் கறிக்கடையில் வேலை செய்தேன்.

மீண்டும் சென்னை வந்தேன். வேலைத்தேடி அலையாத இடம் இச்சென்னையில் இல்லை. கடைசியாக துணிக்கடையில் வெளியில் இருந்து கடைக்கு வரும் வடிக்கையாளர்களை வரவேற்பது எனது வேலையாக இருந்தது.  கடைசியாக ஸ்பென்சர் வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறேன். இங்கு 9 வருடங்களாக வேலை செய்து எனது குடும்பத்திற்கு உதவிகளை செய்து வருகிறேன். எனக்கு தற்போது தன்னம்பிக்கை உள்ளது நானும் உலகத்தை வெல்ல முடியும் என்று.

நேர்காணல் www.enabled.inலிருந்து.

Leave a comment

Share Your Thoughts...