இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி

இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி

ஆறாவது அகில இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி

முக்கிய நாட்கள்

கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: செப்டம்பர், 30, 2017

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி:

TO
The Secretary General,
All India Confederation of the Blind,
Braille Bhawan,
(Behind Rajiv Ghandi Cancer Hospital)
Sector-5, Rohini,
Delhi-110085 (India).

ரொக்கப் பரிசு-

இளநிலைப் பிரிவு: ரூபாய் 8000, 5000, 3000
முதுநிலைப் பிரிவு: ரூபாய் 10000, 7000, 4000

ஆறாவது அகில இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி

AICB Entrance Test for Computer Training Course and Hindi Shorthandநாடு முழுவதும் பிரையிலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு, AICB ஆண்டு தோறும் பிரையில் கட்டுரைப் போட்டி நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். அதன்படி, இந்த ஆண்டும் அப்போட்டியினை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கட்டுரைப் போட்டியானது பார்வையற்றோர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட திரு. மதன்லால் கந்தெல்வால் அவர்களின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போட்டியானது, “அகில இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டி” என்ற பெயரில் நடத்தப்பட்டுவருகிறது.
இக்கட்டுரைப் போட்டியானது, இந்திய மொழிகள் சிலவற்றிலும், ஆங்கிலத்திலும் நடைபெறும். நமது செயல்பாடுகளில், தொடர்ந்து இடம்பெறும் ஒரு சிறந்த நிகழ்ச்சியாக இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வெகுமதியாக ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

லண்டன் மாநகரை சேர்ந்தவரும், புகழ்பெற்ற சமூகத் தொண்டருமான, காலம் சென்ற, உயர்திரு. மதன்லால் கந்தெல்வால் அவர்கள், நமது அமைப்பின் மூலம் பல்வேறு பிரையில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தனது வாழ்நாள் முழுவதும் நிதி உதவி வழங்கியவர் என்பதை பலரும் அறிவோம். மேலும், நமது அமைப்புக்கு வைப்பு நிதியாக இருபது லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய பேருள்ளம் படைத்த கொடையாளர் அவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கட்டுரைத் தலைப்புகள்

இளநிலைப் பிரிவு (தமிழ்)

“பார்வையற்ற மாணவர்களும், அவர்களுக்கான பாலியல் கல்வியும்”
அல்லது
“புத்தகங்களை படிப்பதில் என்னுடைய தேர்வு எதுவாக இருக்கும்? பிரையில் முறையிலான புத்தகங்களா அல்லது ஒலிப் புத்தகங்களா? அப்படி தேர்ந்தெடுக்க காரணங்கள்?”

Junior group (English)
“Visually Impaired Students and Sex Education”
OR
“Which I do prefer more – books in Braille or recorded books? why?”

முதுநிலை (தமிழ்)

“இந்திய விண்வெளித்திட்டங்கள் – அவற்றின் தேவையும், அவற்றின் எதார்த்த பொருத்தமும்”
அல்லது
“இந்தியாவில் தீவிரவாதம் தலைத்தூக்குவதற்கான உண்மையான காரணங்களும், அதை முறியடிப்பதற்கான தீர்வுகளும்”

Senior group (English)
“India’s Space Research Programme – Utility and Relevance”
OR
“Militancy in India – real causes and prevention solutions”

போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்

இப்போட்டியானது இரண்டு குழுக்களாக நடத்தப்படும். கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் இரண்டு பிரிவினர்களாக பிரிக்கப்படுவர். அதாவது, 18 வயதுவரை உள்ள போட்டியாளர்கள் இளநிலைப் பிரிவிலும், 18 வயதிற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் முதுநிலைப் பிரிவிலும் பங்கேற்க வேண்டும்.

இக்கட்டுரைப் போட்டியானது பார்வையற்றவர்களால் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட வேண்டும்.

இதுவரை நடைப்பெற்ற அகில இந்திய மதன்லால் கந்தெல்வால் நினைவு பிரையில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்கள், இந்த ஆண்டு பங்கேற்க அனுமதி வழங்கப்படமாட்டாது.

கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் இரண்டாம் நிலை சுருக்கெழுத்தினை (contracted braille grade 2) பயன்படுத்தியும், மற்ற இந்திய மொழிகளில் எழுதுபவர்கள் எந்தவித சுருக்கெழுத்தினையும் பயன்படுத்தாமல் எழுத வேண்டும்.

கட்டுரைகள் பிரையில் பலகை, பிரையில் தட்டச்சு, பெர்க்கின்ஸ் சாதனங்கள் மூலம் மட்டுமே எழுதப்பட வேண்டும். கணினி மென்பொருள் மூலம் பிரையிலில் மாற்றப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

கட்டுரைகள் காகிதத்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டும். மேலும், கட்டுரையின் பக்க எண்கள் காகிதத்தின் வலது பக்க மேல் முனையில் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட வேண்டும்.

இளநிலைப் பிரிவினர் 500 – 700 வார்த்தைகளுக்கு மிகாமலும், முதுநிலைப் பிரிவினர் 800 – 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கட்டுரையை எழுத வேண்டும். இவ்விதிகளை மீறும் கட்டுரைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.

போட்டியில் ஒவ்வொரு மொழியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் இளநிலை பிரிவினர்களுக்கு, ரொக்கப் பரிசாக ரூபாய் 8000, 5000, 3000 வழங்கப்படும். அதே போல் முதுநிலைப் பிரிவிலும் முறையே, 10000, 7000, 4000 வழங்கப்படும். வெற்றிப் பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டுரையானது போட்டியாளர்களின் சொந்தப் படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.
அனைத்து மொழிகளிலும் எழுதப்படும் கட்டுரைகள் அனுபவம் வாய்ந்த நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும்.

ஒவ்வொரு மொழியிலும் சிறந்த மூன்று கட்டுரைகள் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
I.உள்ளடக்கம்
II.மொழி வளம் மற்றும் எழுத்து நடை
III.பிரையில் திறன் மற்றும் நேர்த்தி

உறை மேல் முகவரியுடன், கட்டுரையின் மொழி மற்றும் போட்டியாளரின் பிரிவு இளநிலையா, முதுநிலையா என்பதையும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

முத்துச்செல்வி
செயலாளர்
Call:  9600116996
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.

 

Leave a comment

Share Your Thoughts...