தமிழ
்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட’ நன்றி பாராட்டும் விழாவில்’ கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.
சமூகநலத்துறை அமைச்சர் திருமதி: கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சிறப்புரை ஆற்றிய தமிழக முதல்வர் கலைஞர், இங்கே நம்முடைய அமைச்சர் கீதாஜீவன் எடுத்துக்காட்டியதைப் போல் – கனிமொழி குறிப்பிட்டதைப் போல், சில மாதங்களுக்கு முன்பு உங்களுடைய இருபதுக்கு மேற்பட்ட கோரிக்கைகளை இருபதே நிமிடத்தில் பார்த்துப் படித்து, தமிழக அரசின் சார்பில் அதை நிறைவேற்றி அறிவித்த நிலையை நீங்கள் மறந்துவிடவில்லை.
மறந்திருந்தால், நன்றி கூற வந்திருக்க மாட்டீர்கள், மறந்திருந்தால் இந்தப் பாராட்டு விழாவை நடத்தியிருக்க மாட்டீர்கள். நான் எதிர்பார்ப்பது இன்னும் பல பாராட்டு விழாக்கள் எனக்கு நடைபெற வேண்டும் என்று தான் எனக் குறிப்பிட்டார். கலைஞர் அவர்களின் இந்தக் கூற்றுக்கு பலத்த கரகோஷம் எழுந்தது. அங்கு அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் கீழே;
ஊனமுற்றோர் என அழைக்கப்படும் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே, வள்ளுவர் கோட்டம் நிரம்பி வழிகின்ற வகையில் குழுமி யிருக்கின்ற நீங்கள் எல்லாம் எதையும் எதிர்பார்த்து அல்ல – ஏனென்றால் எதிர்பார்ப்பதைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டு நடத்துகின்ற ஆட்சிக்கு தலைவனாக இருக்கிறேன் என்ற முறையில் – அந்த நம்பிக்கையோடு நீங்கள் எல்லாம் இங்கே கூடியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெளிவாக, நன்றாகத் தெரியும்
மேலும் இது தொடர்பாக,http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/5133-2010-01-21-22-48-50