சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.
கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்று தனது படைப்புக்கள் மூலமாக சேலம் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் இனிய நந்தவனம் இதழின் செய்தியாளராக செயல்பட்டு வருகிறார்.
தனது முதல் நூலான ”பயணவழிப் பூக்கள்” கவிதைத் தொகுப்பை 2004 இல் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து ”சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம் 1)”, ”சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம் 2)”, ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் போன்ற தொகுப்புகளின் வாயிலாக ஊனமுற்றோரின் சாதனைகளை புத்தகங்களாக்கி வருகிறார். மேலும் ”கல்விச் செல்வம்” என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
how do i contact mr mathiazhagan ?