வண்ண காகிதங்களில் கலைப்பொருட்களை உருவாக்கி அதை தொழிலாக மாற்றி, அதில் தனது திறமைகளை உள்ளடக்கி பலருக்கு தனது தொழிலை கற்றுத்தந்து தனது உடல் இயலாமையை தனது திறமையாக மாற்றி இருக்கிறார் மாற்றுத்திறனாளியான குணவதி சந்திர சேகரன்.
இவரது அழகிய குடும்பத்தில் கணவர் சந்திர சேகரன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது பல கேள்விகளும் மற்றும் தனிமையும் இவரது திறமைகளை தேட ஆரம்பித்தன.
பேப்பர் ஜிமிக்கியில் இவரது திறமை தொடங்கி இன்று இவரது கற்பனையிலும் திறமையிலும் பல பரிமாணங்களில் குயில்லிங் வளர்ச்சியடைந்து இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு திறமைகள் அதிக அளவில் உள்ளது. அதை எவ்வாறு வளர்த்து கொள்வது என்பதுதான் முக்கியம். திறமைகளுக்கான வாய்ப்புகளை தொடர்ந்து தேடி கொண்டே இருக்க வேண்டும். இதற்கு கால நிர்ணயம் என்பது கிடையாது. சிலருக்கு உடனே கிடைக்கும் சிலருக்கு பல வருடங்கள் ஆகும். அது நமக்கு மேலும் பலவற்றை கற்று கொடுக்கும். குணவதி போன்றவர்கள் நமக்கு எடுத்துகாட்டாக உள்ளனர்.
இவற்றிலிருந்து நாம் கற்று நமது திறமைகளை வெளி கொண்டு வர வேண்டும். அவ்வாறாக தனது சுயமுயற்ச்சினாலும் திறமையினாலும் இன்று மிகச்சிறந்த நபராக, சுயதொழிலில் நிமிர்ந்து நிற்கிறார் குணவதி அவர்கள். இன்று, பல மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த தொழிலை கற்று கொடுக்கிறார். இவரது திறமைகளை இங்கு காணலாம்
மாநில அளவில் பரிசு பெற்ற கைவண்ணம்
குயில்லிங் புகைப்படம்
குயில்லிங் அணிகலன்கள்
குயில்லிங் திருமண அழைப்பிதழ்
பிற குயில்லிங் படைப்புகள்
தொடர்பு கொள்ள
Gunavathy Chandrasekaran
Email : gunasquilling@gmail.com
Phone : +91 80126 12333