மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் குமாரராஜா மு.அ.முத் தையா செட்டியார் நினைவுப்பரிசு மற்றும் விருது அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அண் ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்ட ளையின் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி தெரி வித்திருப்பதாவது:
1996ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குமாரராஜா மு.அ.முத் தையா செட்டியார் பிறந்தநாளை செப்.6 ஆம் தேதி மாற்றுத்திற னாளிகளின் நலனுக்காக தொண்டாற்றி வரும் சிறந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் நினைவுப் பரிசும், விருதும் வழங்கி வருகிறோம்.
2011ஆம் ஆண்டிற் கான இவ்விருதை மாற் றுத்திறனாளிகளுக்குச் சிறந்த முறையில் தொண் டாற்றிவரும் சென்னை திருவான்மியூர் ப்ரீடம் அறக்கட்டளைக்கு வழங்க தேர்வு செய் யப்பட்டுள்ளது.
வரும் செப்.6ஆம் தேதி சென்னை ராணி சீதை மன்றத்தில் நடை பெறும் குமாரராஜா மு.அ.முத்தையா செட்டி யாரின் 83ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் இவ்விருதும் பரிசும் வழங்கி சிறப்பிக்க இருக் கிறோம். அண்ணா மலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் எம்.ஏ. எம்.இராமசாமி தலை மையில் நடைபெறும் இவ்விழாவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ. இராமமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு ப்ரீடம் அறக் கட்டளையின் நிருவாகி டாக்டர் எஸ்.சுந்தருக்கு விருது வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்.
இவ்விழா சிறப்பு ரையை பேராசிரியர் முனைவர் புரிசை ச.நட ராசன் நிகழ்த்துகிறார். அண்ணாமலை செட்டி யார் நினைவு அறக்கட் டளையின் தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, பொருளாளர் சிதம்பரம் மற்றும் கல்வியாளர்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர் என இந்த அறக்கட்டளையின் செயலாளர் ஏ.ஆர்.ராம சாமி தெரிவித்துள்ளார்.