மாற்றுத்திறானளிகள், குறிப்பாக சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்துபவர்களுக்கு, கொரோனா வைரஸ் தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது, ஏனெனில் ஊன்றுகோல் மற்றும் சக்கர நாற்காலிகள் அடிக்கடி மற்றும் பல இடங்களில் தொடப்படுகின்றன. உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள், குறைந்தது 20 வினாடிகள், குறிப்பாக உபகரணங்களை சுத்தம் செய்வதற்கு முன்னும் பின்னும்.
இங்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தொகுத்து வழங்குகிறோம்.
உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்
கைகளை சரியாக கழுவுவது எப்படி?
1
கைகளை தண்ணீரில் முழுமையாக கழுவவும்
2
சோப்பு கரைசலை கை முழுவதும் தடவவும்
3
இரு உள்ளங்கையும் நன்றாக தேய்க்கவும்
4
இடது கை விரல் முடிவிலிருந்து மணிக்கட்டு வரை உள்ள உள்ளங்கை பாகத்தினை நன்றாக தேய்க்கவும். பிறகு வலது கைக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்
5
இடது கை விரல் முடிவிலிருந்து மணிக்கட்டு வரை உள்ள விரல் பாகத்தினை நன்றாக தேய்க்கவும். பிறகு வலது கைக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்
6
விரல்களின் முதுகில் விரல்களைக் கொண்டு எதிரெதிர் உள்ளங்கைகளை நன்றாக தேய்க்கவும்
7
இடது கட்டைவிரலின் பற்றி சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும்இ வலதுபுறம் அவ்வறே செய்ய வேண்டும்.
8
இடது உள்ளங்கையில் வலது கையின் பிணைக்கப்பட்ட விரல்களால் பின்னோக்கி மற்றும் முன்னோக்கி மற்றும் நேர்மாறாக தேய்க்க.
Step : 9
கைகளை தண்ணீரில் கழுவவும்
Step : 10
ஒற்றை பயன்பாட்டு துண்டை கொண்டு நன்றாக உலர வைக்கவும்
11
தண்ணீர் குழாயை அணைக்க ஒற்றை துண்டை கொண்டு பயன்படுத்தவும்
12
இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கைகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிசெய்ய முடியும்
மேலும் படிக்க
ref : www.who.int