கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் மாற்றுத் திறனாளிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் - enabled.in

கொரோனா வைரஸை பற்றி பயப்பட தேவையில்லை, ஆனால் மாற்றுத் திறனாளிகளான நாம் இத்தகைய காலகட்டத்திலும், பேரிடர் காலத்திலும் அல்லது எப்போதும் சில முன்னேற்பாடுகளுடன் இருப்பது மிகச்சிறந்தது. ஏன்னென்றால் நம்மை சுற்றியுள்ள அனைவரும் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள முயற்ச்சிக்கும் போது, நாம் தனித்துவிடப்படுவோம். நாம் எப்போதும் நம்மை தனித்தன்மையுடன் மாற்ற முயற்ச்சிக்க வேண்டும்.

முன்னேற்பாடுகள் சிலவற்றை இங்கு நான் தொகுத்து வழங்குகிறேன்.

கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் மாற்றுத் திறனாளிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்

செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்

  • உதவியாளர் / குடும்பத்தினர் தேவை – மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தங்களுடைய உதவியாளர் / குடும்பத்தினரின் தொலைபேசி/மின்னஞ்சல்/ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • தயார் நிலையில் உபகரணங்கள் – தங்களுக்கு தேவையான உபகரணங்கள் அதற்க்கு தேவையான உதவி உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துகொள்ள வேண்டும்.
    • பார்வையற்றோர்கான செல்பேசி உடன் கூடுதல் மின்கலம், ஊன்றுகோல்
    • செவித்திறன் குறைப்படுள்ளவர்கள் செவித்திறன் கருவிகள் உடன் கூடுதல் மின்கலம்
    • வீல்சேர் வைத்திருப்பர்கள் அதை சரியான முறையில் வைத்திருத்தல், சீறுநீரக பைகள், வீல்சேர்க்கான கருவிகள்
    • மூன்றுச்சக்கர மேட்டர் வண்டி வைத்திருப்பர்கள் கூடுதலான பெட்ரேல்
  • உணவுகள் – மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை 4 வாரங்களுக்கு தேவையானவற்றை சேமிக்க வேண்டும். அவசர காலத்தில் நாம் மற்றவர்களை சார்ந்திருப்பதை தவிர்க்கும்.
  • மருந்துகள் – அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வேறுப்பட்ட மருந்துகள் தேவைப்படும். தரமான மருந்துகளை முன்பே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அருகில் அல்லது எளிதில் அணுகக்கூடிய மருத்துவமனை அல்லது மருந்தக தொடர்ப்பை வைத்திருப்பது நல்லது.
  • பிற முக்கியமான பொருட்களை சேமிக்கவும் – கழிப்பறை காகிதம், துப்புரவு பொருட்கள், சுகாதார பொருட்கள் போன்ற பிற பொருட்களின் பற்றாக்குறை இருக்கலாம். நீங்கள் அவற்றை பதுக்கி வைக்க தேவையில்லை, ஆனால் உங்கள் வீட்டில் ஒரு விநியோகத்தை வைக்க திட்டமிடுங்கள். மாற்றுத் திறனாளிகளான நமக்கு மிகவும் அவசியம் கூட.
  • முக்கிய தொடர்புகள் – அருகில் உள்ள சுகதார மையம், காவல் நிலையம், அவசர கால எண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள், பொது சேவை மைய எண்கள், அவசர ஊர்தி எண், நண்பர்கள் எண். இவை மற்றவர்களுக்க கட்டாயம் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
  • சுத்தமான கைகள் / உபகரணங்கள் – நமக்கு மற்றவர்களின் பங்களிப்பு மிகவும் தேவை – அதே நேரம் கொரோனா வைரஸிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டும். நமக்கு உதவும் வண்ணம் நமது உபகரணங்களை எண்ணற்ற நபர்கள் தொடுவார்கள். அனைத்தையும் நாம் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும்.
    • நீங்களும் உங்கள் உதவியாளர்கள் உங்கள் வீட்டிற்கு வந்தவுடன் கை சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் உங்களைத் தொடுவதற்கு அல்லது உணவளிக்க முன். மீண்டும் மீண்டும் கை கழுவுதல் நல்லது. அடிக்கடி தொடும் பொருட்களில் கிருமிநாசினி துடைப்பான்களைப் பயன்படுத்துங்கள்.
  • பண கையிருப்பு – பண கையிருப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு முறையும் ஏடிம் தேட முடியது. ஆதலால் பண கையிருப்பு (காசோலை) வைத்திருத்தல் மிகவும் முக்கியம்

மேலும் முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள என்ற பக்கத்தை https://enabled.in/wp/tag/coronavirus/பார்க்கவும்

மாற்றுத்திறனாளிகளான நாம் மிகவும் முன்னேற்படுகளுடன் இருப்பது மிகவும் முக்கியம். அதே நேரம் அனைவரும் தொடர்பில் என்பதும் மிகவும் தேவை.

நாம் நாட்டில் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு மாற்றுத்திறனாளி அமைப்புகளும் தங்களது உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.

இவண்
– Sathasivam Kannupayan
Accessibility Specialist – Digital / Environment
+91 9840 515 647

மேலும் விரிவாக தெரிந்து கொள்ள

Leave a comment

Share Your Thoughts...