கொரோன வைரஸ் : மாற்றுத் திறனாளிக்கு சமமான பாகுபாட்டையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும். - enabled.in

இன்று கொரோன வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்ச்சிகள் பாரட்டடுக்குறியது. ஏன்னென்றால் ஒரு உயிர்கூட இழுக்க கூடாது என்பது அரசின் எண்ணம். இத்தகைய நிலையில் ஊரடங்கு போன்ற முயற்ச்சிகள் வரவேற்க ஒன்று.

மாற்றுத்திறனாளிகளுக்கு நான் கூறிக்கொள்வது, மாற்றுத்திறனாளிகளும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் பல கடினங்கள் இருந்தாலும் இந்த நிலை கட்டாய தேவை.

கொரோன வைரஸில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தங்களை தனிமைப்படுத்தும் போது தனித்துவிடப்படும் நிலை அல்லது அவர்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்காத நிலை உருவாகும் நிலை ஏற்படும்.

இங்கு நான் குறிப்பிட முயல்வது, இத்தகைய நிலையில் உணவு இல்லாமல் ஒரு உயிர் கூட பேய்விட அனுமதிக்க கூடாது. முக்கியமான மாற்றுத்திறனாளிகள். இங்கு மாற்றுத்திறனாளிகளை குறிப்பிட பல காரணங்கள் உள்ளது.

  • பல மாற்றுத்திறனாளிகள் சிறுகுரு சுய தொழிலை நம்பி வாழ்கை நடத்தி வருகிறார்கள், தின வருமானத்தின் மூலம் தான் அவர்களது வாழ்வை நடத்தி வருகிறது.
  • உதராணமாக பெட்டிக்கடை, மின்னனு சாதனங்களை சரிபார்த்தல் மற்றும் வீட்டிலிருந்து சுய தொழில் செய்பவர்கள் தின வருமானத்தை இன்று சார்ந்து இருக்கிறார்கள்.
  • வரும் 15, 30 நாட்கள் அல்லது 3 மாதங்கள் மக்கள் தனிமை படுத்தப்பட்டால் அவர்களது வருமானம் கேள்வி குறி.
  • இங்கு சேமிப்பு என்பது மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் இல்லை என்பதை விட, முடியாது என்று தான் கூற முடியும். ஏன்னென்றால் மற்றவர்களை விட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40-70 சதவீதம் செலவினம் ஏற்படுகிறது. இதை ஏந்த அரசும், பொருளாதார நிபுனர்களும் ஏன் அறிய முடியவில்லை (முற்படவில்லை) என்பது இன்னும் எனக்கு வியப்பாக உள்ளது.
  • இந்த அவசர நிலையில் மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு கடந்து வருவார்கள் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் வாழ அவசியமான உதவிகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள் பலர் அரசு வேலையில்லாமல் வீட்டில் பெற்றோரை சார்ந்து இருக்கிறார்கள், அவர்களில் பலர் தினகூலி என்பது குறிப்பிடத்தக்து.
  • மாற்றுத்திறனாளிகளில் சுமார் 75 சதவீதத்தினர் சுயதொழிலை நம்பியே வாழ்க்கையை நடத்துகின்றனார். இந்த அவசர கால நிலையில் அவர்களின் தின உணவு என்பது கேள்விக்குறியானது.
  • மாற்றுத்திறனாளிகள் எண்ணற்றவர்கள் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்கின்றார்கள். இவர்களின் நிலை இன்னும் கடினமான ஒன்று.இவர்களது அவசர கால தேவைகளை எப்படி நிவரத்தி செய்து கொள்ள போகிறார்கள் என்பது கடினமான ஒன்று. மாற்றவர்களின் உதவி இன்றி தனித்து விடப்படுவர்கள்.
  • பல மாற்றுத்திறனாளிகள் வயதான பொற்றோருடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் இருவரும் தங்களை பாதுகாப்பது என்பது மிகவும் கடினம். இவர்கள் இருவரின் மருத்துவ தேவைகளை யார் செய்து கொடுக்கபோகிறார்கள் என்பது கேள்விக்குறி.

சில பரிந்துரைகள்

மாற்றுத்திறனாளிக்கு எதிரான பாகுபாட்டையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய சில பரிந்துரைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  • அரசு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அவசர கால உதவித்தொகை வழங்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள் மருத்துவ தேவைக்காக மருத்துவமனை சென்று வர பொது போக்குவரத்தை நாட உள்ளதால் அவர்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்துக்கு உறதி செய்ய வேண்டும்.
  • மருந்துகள் மற்றும் மருத்துவ உதவி, உடற்ப்பயற்ச்சிக்கள் போன்றவை பாதுகாப்புடன் தங்கு தடையின்றி உறுதி செய்ய வேண்டும்.
  • தனியார் துறையில் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளின் வேலையை உறுதி செய்ய வேண்டும்.
  • தன்னார்வளர்களின் உதவியை தடுக்காமல் பாதுக்காப்பான உதவியை உறுதி செய்ய வேண்டும்.
  • வயதான மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் குழு மற்றும் அமைப்புக்காளுக்கான பரிந்துரைகள்

  • அனைத்து மாற்றுத்திறனாளி அமைப்புகள் தங்களுக்கென்று அவசரகால குழுக்களை ஏற்படுத்திகொண்டு, அதை தங்களது உறுப்பினர்கள் அனைவருக்கும் எவ்வாறு தொரடர்ப்பு கொள்ள வேண்டும் என்பதை தெரியபடுத்த வேண்டும்.
  • அவசரகால குழுக்கள் அரசுடன் இணைந்து மாற்றுத்திறனாளிக்கு மருத்துவ உதவி வழங்க ஏற்படுகள் செய்ய வேண்டும்.
  • மத்திய மாநில மற்றும் சுகாதர துறைக்கு தேவையான விழிப்புணர்வுகளை குழுக்கள் ஏற்ப்படுத்த வேண்டும்.
  • அவசரகால குழுக்கள் மருத்துவ உபகாரணங்கள, மருந்துகள் மற்றும் தேவைகளை உடனடியாக உறுப்பினர்கள் பெற வழிவகை செய்ய வேண்டும்.

Leave a comment

Share Your Thoughts...