இளம் மாற்றுத்திறனாளிகள் தொழில்முறையினருக்கு அதாவது தங்களது சொந்தத் தொழில் துவக்குவதற்கு தேசீய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (www.nhfdc.nic.in)த்தின் மூலம்
ஊரகப் பகுதியில் ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சம் வரை நகர்புறத்தில் ரூ 5.00 லட்சம் வரை உள்ள குடும்பத்தைச் சேர்ந்த 40% அல்லது அதற்கு மேல் உடல் குறைபாடுடைய, தகுதி பெற்ற தொழில்முறை மாற்றுத் திறனாளிகள் சுயத்தொழில் தொடங்க கடன் வசதி.
கடன் வரம்பு : ரூ. 25 லட்சம் வரை
தொழில் தொடங்குபவரின் பங்கு : 10% வரை
வட்டி விகிதம் : 4 – 8 % ஆண்டுக்கு ( கடன் தொகையைப் பொறுத்து)
திருப்பிச் செலுத்தும் காலம் : 10 ஆண்டுகள் வரை.
மேலும் விபரங்களுக்கு, சென்னையில் உள்ள தமிழ் நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தேசீய கழகங்கள் இணையதளத்தில் மாநில கழகங்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இணையதள விபரங்களுக்கு : www.socialjustice.nic.in