மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரத்திற்கு (swayamvaram) நேற்று(04-09-2011) கீதா பவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்தியது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வெகுதிரளான மாற்றுத்தினாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி எனக்கு பல ஆச்சிரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்தது. இதில் பலதரப்பட்ட மக்களை சந்திக்க நேர்ந்தது.
திரு.சலோமன் ராஜா என்பவர் கூறும்போது, என்னுடைய சாகோதரர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் சுயமாக தொழில் செய்துவருகிறார். இந்நிகழ்ச்சி எனது சகோதரருக்கு மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சியாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
கோபிலிருந்து சிவசண்மூகம் என்பவர் சுயமாக எலட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரிடம் மூன்று பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர் கூறும்போது, நான் கடினப்பட்டுதான் வேலை செய்து வருகிறேன். எனக்கு ஏற்ற துணையை தேடி வந்திருக்கிறேன். என்னால் முடியாது என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. பலர் என்னையும் என்திறமையையும் கேலி செய்திருக்கிறார்கள் ஆனால் எனக்கு தெரியும் இது என் வாழ்க்கை என் திறமை இதை நிறுபிக்கும்போது அதன் வெற்றி எவ்வாறு இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாது. இத்திருமண நிகழ்ச்சி என் வாழ்க்கைக்கு மேலும் ஒரு அடிதாளமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன் என்று கூறினார்.
பகவதி என்பவர் +2 வரை படித்துள்ளார். இவர் சென்னை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியில் உள்ளார். தற்போது சென்னையில் வசித்தாலும் மிகப்பெரிய பாடகர் ஆகவேண்டும் என்று மதுரையில் இருந்து 5 வருடங்களுக்கு முன்பாக சென்னை வந்தார். போரடிய காலங்கள் இவரை தவிர்தாலும் இன்றும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் கூறும்போது மாற்றுத்திறானளிகள் திறமைகளை இன்னும் இந்த உலகம் பயன்படுத்தி கொள்ள தவறிவருகிறது. ஆனாலும் நாங்கள் தளர்ந்து விடமாட்டாம். திறமைகளுக்கு என்றும் அளிவில்லை என்று நம்பிக்கையுடன் கூறினார். மேலும் கூறம்போது திருமணம் எங்களுக்கு மிகமுக்கியமான ஒன்று. இதை பல மாற்றுத்திறானிகள் இன்னும் புரிந்துகொள்ளமால் இருக்கிறார்கள். எனது திருமணம் வெகு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
செல்வி நாகமா கூறும்போது, நான் மாயிலாபூரில் வசித்து வருகிறேன். தற்போது ஒரு தொண்டு நிறுவணத்தில் ஒவியாராக பணிபுரிந்து வருகிறேன். இந்நிகழ்ச்சி எனக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இரண்டாம் ஆண்டு படிக்கும் லையோலா கல்லூரி (Loyola college)மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றினர். திரு.அகிலன் கூறும்போது, எனக்கு இது முதல் அனுபவம். நான் இந்நிகழ்ச்சிக்கு வந்ததை கூறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் மாற்றுத்திறனாளிகள் இவ்வளவு திறமையுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. இவர்களது தன்னம்பிக்கையும் உறுதியான முடிவும் என் வாழ்கையின் எண்ணற்ற பக்கங்களை மாற்றி அமைத்துவிட்டன என்று கூறினார்.
திரு.பிரதீப் கூறும்போது, எனது குடும்பத்தில் அனைவரும் மாற்றுத்திறனாளிகள். எனக்கு அவர்களுடன் எவ்வாறு பழகவேண்டும் அவர்களது தேவைகளை எனக்கு தெரியும் நினைத்திருந்தேன். இங்கு பலதரப்பட்ட மாற்றுத்திறனாளிகளை சந்தித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அதுவும் அவர்களது விடமுயற்சி எனது வாழ்ககைக்கும் எனது படிப்புக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் சிறிதும் அயம்மில்லை.
நேகாவில் வார்த்தையில், என் வாழ்க்கையில் ஒவ்வொரு அர்த்தங்களையும் இந்நிகழ்ச்சி உணர்த்தியது. கல்லூரி வாழ்க்கை என்பது படிப்புகவும் நண்பர்களுக்காகவும் என்ற எண்ணத்தை மாற்றிபோட்டது. வித்தியாசமான வாழ்க்கை, வித்தியாசமான நடவடிக்கை, வித்தியாசமான எண்ணங்கள் என்று ஒருங்கே இப்போதுதான் இங்கு பார்க்கிறேன். நான் இங்கு சேவை செய்ய வந்தேன், ஆனால் உண்மையில் இவர்கள்தான் எங்களுக்கு சேவை செய்தார்கள் என்று உணர்ச்சிகரமாக பேசினர்.
நான் இந்நிகழ்ச்சிக்கு வந்த மாற்றுத்திறனாளிகளை பலரை சந்தித்தேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மாற்றமுடியாத ஒரு நம்பிக்கையை பார்க்க முடிந்தது. எண்ணற்றவர்கள் இதை வேடிக்கையாக பார்த்தாலும் இதில் உள்ள ஒரு ஏக்கத்தையும் அதில் உள்ள திறமைகளையும் வெகுசிலரே புரிந்துகொள்ள முடியும். ஆனாலும் சுயவரம் சுயவரத்திற்காக நடத்தப்படுகிறதா இல்லை திருமணம் நடைபெறததால் நடக்கிறதா என்று புரிந்துகொள்ள சற்று முயற்ச்சி செய்ய வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை.
ஒவ்வொரு விநாடியும் நம்மைகளும் கடினங்களும் இருக்கிறது என்பதை புரிந்து வாழந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
இவண் சதாசிவம் www.enabled.inலிருந்து.