சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வண்டியை தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்து தொடர்ந்து சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக ஓர் அரிய கண்டுபிடிப்பை அய்ந்து மாணவர்கள் ஒன்று சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறார்கள். அது சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வண்டி. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ராமசேஷன், ஹரிராம், வசந்த், முத்துராமன், விவேக் ஆகிய அய்வரும் இயந்திரப் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள். அவர்களின் சாதனை இது.
இந்தக் குழுவின் தலைவர் போல செயல்படுகிறார் ராமசேஷன். அவருடைய தாயார் ஆர்.சியாமளா, மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அதிகாரியாக திருச்சியில் பணிபுரிகிறார். “என்னுடைய அம்மா நான் சிறு பையனாக இருந்தபோதே பல்வேறு மாற்றுத் திறனாளிகளுக் கான பள்ளிகளுக்கும், பயிற்சி மய்யங்களுக்கும் என்னை அழைத்துப் போயிருக்கிறார்.
மாற்றுத் திற னாளிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களுக் குப் பயன்படும்விதமாக எதையாவது செய்ய வேண் டும் என்று நினைப்பேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பொறியியல் இரண்டாமாண்டு படிக் கும்போது அம்மாவிடம் என் ஆசையைத் தெரிவித் தேன். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் அடிப் படையில்தான் மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த மூன்று சக்கர வண்டியை உருவாக்கத் தொடங்கி னோம்” என்கிறார் ராமசேஷன்.
“நாங்கள் அய்வரும் எங்களுடைய ஆசிரியர் களான தமிழரசன் சாரிடமும், சிறீவித்யா மேடத் திடமும் எங்களுடைய விருப்பத்தைச் சொன்னோம். அவர்கள் எங்களுடைய முயற்சிக்கு முழு ஒத்துழைப் புத் தந்தார்கள். துணைவேந்தர் நல்.இராமச்சந்திர னும் ஊக்கமளித்தார். பல்கலைக் கழகத்தில் இந்த வண்டி செய்வதற்கான பொருட்கள் எளிதாகக் கிடைத்தன. முதலில் வெறும் மூன்று சக்கர சைக்கிளை மட்டும் வாங்கி வந்தோம். பின்பு எந்த மோட்டாரை அதில் பொருத்துவது என்று பலநாட்கள் யோசனை செய்தோம்.
பெட்ரோல், டீசலால் இயங்கும் மோட்டார்களைப் பொருத்தினால் மாற்றுத் திறனாளிகள் பெட்ரோல் போட முடியாமல் திண்டாடுவார்கள் என்பதால் எரிபொருள் செலவில்லாத, சிக்கனமான முறையில் இயங்கும் மோட்டாரையே பொருத்துவதென முடிவு செய்தோம். அப்படிப் பொருத்தும்போது “ஹப் டிரைவ்’ மோட்டாரைப் பொருத்தினோம். இந்த மோட்டார், சக்கரத்தில் பொருத்தக் கூடியது. வண்டியில் வேறு இடத்தில் பொருத்தினால் அது இடத்தை அடைத்துக் கொள்ளும்.
இந்த மோட்டார் இயங்க மின்சாரம் வேண்டும். அதற்கு சூரிய ஒளி ஆற்றல் பேனல்களை இருக் கைக்கு மேல்புறம் பொருத்தினோம். மூன்று சக்கர வண்டியை நாங்கள் உருவாக்கினாலும், எங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு மாற்றுத் திறனாளிகளை இந்த வண்டியை ஓட்டிப் பார்க்கச் சொன்னோம்.
அவர்கள் கூறிய சில யோசனைகளை ஏற்று வண்டியை மாற்றி அமைத்தோம். உதாரணமாக பேட்டரி முதலில் கால் வைக்கும் இடத்துக்கு அருகில் இருந்தது. இது இடைஞ்சலாக இருக்கிறது என்றார்கள். உடனே பேட்டரியை சீட்டுக்கு அடியில் வைத்தோம்.
அதுபோல சூரிய ஒளி ஆற்றல் பேனல்களை வெயில் அடிக்கும் திசையை நோக்கி சீட்டில் உட்கார்ந்தபடியே திருப்பி வைத்துக் கொள்ள வசதியாக மாற்றி அமைத்தோம். லக்கேஜ் பாக்ஸ் வைக்கச் சொன்னார்கள். அதையும் வைத்தோம். மேலும் மூன்று சக்கர சைக்கிளுக்கான ஷாக் அப்ஸர்வர்தான் இதில் இருந்தது. அதை நாங்கள் 200 கிலோ எடை தாங்கக் கூடிய ஷாக் அப்ஸர்வராக மாற்றி அமைத்தோம்.
இந்த வண்டி இருபத்தொன் பது கி.மீ. வேகத்தில் ஓடும். முப்பது கி.மீ. வேகத்தில் ஓடினால் அந்த வண்டியை ஓட்டுபவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவது சிரமம். மேலும் நாங்கள் இந்த வண்டியை நீண்ட தொலைவு ஓட்டிச் செல்வ தற்காகத் தயாரிக்கவில்லை. அன்றாடம் வீட்டி லிருந்து கல்வி கற்கும் இடத்துக்கோ, வேலை செய்யுமிடத்துக்கோ போய் வருவதற்காகவே இந்த வண்டியை உருவாக்கினோம். எனவே அதிக வேகம் தேவையில்லை.
பகல் நேரத்தில் ஓட்டும்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக் கப்பட்டு அதில் வண்டி ஓடுகிறது. மேலும் அந்நேரத் தில் பேட்டரி யில் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. அந்த மின்சா ரத்தை வைத்து இரவு நேரங்களில் ஓட் டலாம். சுற்றுச் சூழலுக்குக் கேடு இல்லாமலும், அதே நேரத்தில் எரிபொருள் செலவு வைக்காமலும் இருக்கும் இந்த வண்டியை நாங்கள் தயாரிக்க ரூ.32 ஆயிரம் தேவைப்பட்டது.
ஆனால் மொத்தமாக உற்பத்தி செய்தால் ரூ.25 ஆயிரத்துக்கும் குறை வாகவே இதன் விலை இருக்கும். நாங்கள் அய்வரும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். கிட்டத்தட்ட ஒரே மன அலைவரிசை உடையவர்கள். அதனால்தான் இதைச் சாதிக்க முடிந்தது” என்கிறார் ராமசேஷன் மகிழ்ச்சியுடன்!