தமிழக அரசு 20.02.2016 அன்று சட்டப்பேரவையில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாற்றுத்திறனாளிக்காக வெளியிடப்பட்ட புதிய சலுகையின் தொகுப்பு
ஊனத்தின் தன்மை : பார்வை குறைபாடு
திட்டம் : ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள்
சலுகை: 6 வயதுக்குட்பட்ட பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் 20 மாவட்டங்களில் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு குழந்தைகளை அழைத்து வரும் பாதுகாவலர்களுக்கு கட்டணமின்றி, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் சலுகை வழங்கியதுடன் நாளொன்றுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயணச் செலவுத் தொகை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
திட்டம் :எழுத்துக்களை பெரிதாக்கி
சலுகை : பார்வை குறைவுள்ள குழந்தைகள் படிப்பதற்கு எளிதாக படிக்க வகை செய்யும் விதமாக எழுத்துக்களை பெரிதாக்கி பார்க்கக் கூடிய கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன.
திட்டம் :ஒளிரும் மடக்குக் குச்சி
சலுகை : பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சாதாரண மடக்கு குச்சிகளுக்குப் பதிலாக ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படுகின்றன.
ஊனத்தின் தன்மை :செவித் திறன்
திட்டம் :காதொலிக் கருவி
சலுகை : செவித் திறன் பாதிக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சாதாரண காதொலிக் கருவிகளுக்குப் பதிலாக 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன் வாய்ந்த காதொலிக் கருவிகள் வழங்கப்படுகின்றன.
ஊனத்தின் தன்மை : அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்
திட்டம் :தொழிற் பயிற்சி மையங்கள்
சலுகை : 12 மாவட்டங்களில் மட்டும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் செயல்பட்டு வந்த தொழிற் பயிற்சி மையங்கள் மேலும் 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
திட்டம் :கடன் தொகை
சலுகை : மாற்றுத்திறனாளிகள் தொழில் துவங்க மத்திய கூட்டுறவு வங்கிகளிலிருந்து பெறப்படும் கடன் தொகைக்கான வட்டியினை அரசே செலுத்துகிறது.
திட்டம் :கல்வி ஊக்கத் தொகை
சலுகை : மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பள்ளிகளில் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு மாதமொன்றிற்கு, வழங்கப்பட்டு வரும் உணவு ஊட்டுச் செலவினம் 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதியில் தங்காமல் இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
திட்டம் :உள்ளடக்கிய கல்வி
சலுகை : மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு அவர்களின் இயலா தன்மையின் வகை, பாதிப்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு உள்ளடக்கிய கல்வி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன் முறையாக மாற்று திறன் கொண்ட, குழந்தைகளுக்கென மாநில ஆதார வள மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 108 நகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக பொது கட்டடங்களில் அவர்களுக்கென தனி கழிப்பிடங்கள் 8 கோடியே 20 லட்சம் ருபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன
திட்டம் :கல்வி உதவித் தொகை
சலுகை : மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு 500 முதல் 3,500 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
திட்டம் :வாசிப்பாளர் உதவித் தொகை
சலுகை : 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த வாசிப்பாளர் உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது
திட்டம் :பெட்ரோல் ஸ்கூட்டர்கள்
சலுகை : மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டு தோறும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட, பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 1,000 எண்ணிக்கை வழங்கப்படுகிறது.
திட்டம் :நகரும் சிகிச்சைப் பிரிவுகள்
சலுகை : மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென 32 நகரும் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
திட்டம் :மறு வாழ்வு இல்லங்கள்
சலுகை : மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லங்கள் அரசின் நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 11 மாவட்டங்களில் செயல்பட்டு வந்தன. மேலும் 21 மாவட்டங்களில் இந்த இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று, மன வளர்ச்சிக் குன்றியோருக்கான இல்லங்கள் 21 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நிலையில், மேலும் 11 மாவட்டங்களில் அது போன்ற இல்லங்கள் துவங்கப்பட்டுள்ளன.
திட்டம் :தமிழ்நாடு வீட்டுவசதி
சலுகை : தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதே போன்று, பசுமை வீடுகள் திட்டத்திலும், தொகுப்பு வீடுகள் திட்டத்திலும் 3 சதவீதம் ஓதுக்கீடு செய்யப்படுகிறது.
திட்டம் :தேசிய வேலை உறுதி திட்டம்
சலுகை : தேசிய வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீதம் அல்லது 4 மணி நேரம் வேலைக்கே முழு ஊதியம் வழங்கப்படுகிறது.
திட்டம் :மாதாந்திர உதவித் தொகை
சலுகை : மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு குறைபாட்டின் அளவு 60 சதவீதம் என நிர்ணத்திலிருந்து 40 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு அதாவது, வேலை வாய்ப்பற்ற 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ள, மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர்.
sir my name KARTHIKEYAN NAAN MATRUTHIRANALI 60% WE WANT JOB PLZ HELP
வணக்கம் ஐயா
என்னுடைய சகோதரிக்கு இரண்டு மகன்கள் இரண்டு நபரும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களது தந்தையும் இறந்துவிட்டார்.ஆகையால் நமது அரசின் சலுகைகள் என்னவென்று இவரகளுக்கு தெரியாமலே உள்ளது இவர்கள் மிகவும் வருமையில் வாழ்கின்றனர்.அந்த அரசின் உதவிகளை இவர்களுக்கு கிடைக்க வழி வகை செய்ய மிகப்பணிவுடன் கேட்டு கொள்கிறேன்
இங்ஙனம்
த.இராஜலிங்கம்.
முகவரி
த.ராஜலிங்கம்
நெ.5,மாரியம்மன் கோயில் தெரு,
தேவாதூர்-கிராமம்
வீராணக்குண்ணம்-அஞ்சல்
மதுராந்தகம்-வட்டம்603306
போன்-7358699733