1. சிறந்த பணியாளர் சுயதொழில் புரிபவர் (5 விருதுகள்)
கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தோர்)
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
2. சிறந்த ஆசிரியர் (3 விருதுகள்)
பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்தல்
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
3. சிறந்த சமூகப் பணியாளர் (1 விருது)
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
4. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்(1 விருது)
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
5. மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் (1 விருது)
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
6. ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (2 விருதுகள்)
செவித்திறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
7. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்(2 விருதுகள்)
விருது விவரம் : 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
பதிவிறக்கம் : விண்ணப்பம் (PDF, 128KB)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அல்லது தங்களது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக்ககொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுததினாளிக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 28.10.2016க்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
மாற்றுத்திறனாளிக்க்கான மாநில ஆணையர்,
ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை,
கே.கே.நகர்,
சென்னை – 78