தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 11ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகை - 2019 - enabled.in

2019 – ல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

வித்யாதன் பற்றி:

வித்யாதன் கல்வி உதவித்தொகை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டைளையின் மூலமாக கொடுக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற திறனாய்வு தேர்வுக்கு உட்படுத்தபடுவார்கள்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். உதவித்தொகை பெறும் மாணவர்கள் வரும் கல்வியாண்டில் நல்ல மதிப்பெண் பெற்றால் அடுத்து அவர்கள் விரும்பும் மேற்படிப்புக்கும் உதவப்படும். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தற்போது 1500 க்கும் மேற்ப்பட்ட மாணவரகள் கல்வி பயில்கின்றனர்.

கல்வி உதவித்தொகையின் அளவு:

11 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக வருடத்திற்கு ரூ 6000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:

வித்யாதன் கல்வி உதவிதொகை பெற மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அல்லது புதுச்சசரியில் 2019- ம் வருட கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் 90 சதவீத விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். (மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு 75 சதவீதம்).

தேர்ந்தெடுக்கும் முறை:

மாணவர்களின் விண்ணப்பங்கள் மதிபெண்கள் மற்றும் கொடுக்கபட்ட விவரங்களின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் திறனாய்வு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாணவர்களின் விவரம் மற்றும் நேர்முகத்தேர்வின் இடம் ஆகியவை தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பயணச்செலவுகள் தகுதியுடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:

ஜீலை 21, 2019: விண்ணப்பிக்க கடைசி தேதி

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஜீலை 29 2019 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 4 2019 முதல் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகள் ஆரம்பமாகும்.

தேவையான ஆவணங்கள்:

கீழ்க்காணும் நகல் எடுக்கப்ட்ட ஆவணங்களின் விவரங்கள்:

  1. பத்தாம் வகுப்பு மதிப்பபண் சான்றிதழ் SSLC/CBSE (அசல் கிடைக்கவில்லையென்றால் தற்காலிக சான்றிதல். இதை நீங்கள் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவிறக்க முடியும்.)
  2. வருமான சான்றிதழ் தகுதியுடைய அதிகாரியின் கையொப்பத்துடன்.
  3. புகைப்படம்

தொடர்புக்கு:

எந்த வித விவரங்களுக்கும் vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற முகவரிக்கு அனுப்பவும். அழைக்கவும் ஜேக்கப் சுகுமார், தொலைபேசி எண் 91 73396 59929.

விண்ணப்பிக்கும் முறை:

  1. நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும். இல்லையென்றால் www.gmail.com அல்லது வேறு மின்னஞ்சல் வழங்கும் இணையதளத்தில் ஒரு கணக்கை திறக்கவும்.
  2. எதிர்கால பயன்பாட்டிற்காக மின்னஞ்சல் முகவரி மட்டும் கடவுச்சொல்லை நினைவில் கொள்ள வேண்டும்
  3. வித்யாதன் இணையதளத்தில் புதிய கணக்கை உருவாக்கும் போது கீழ்க்காணும் விவரங்ககளை மறவாமல் பின்பற்றவும்.
    • First Name: கல்வி சான்றிதழில் உள்ளபடி முதல் பெயரை பதிவு செய்யவும்.
    • Last Name: கல்வி சான்றிதழில் உள்ளபடி கடைசி பெயரை பதிவு செய்யவும்.
    • Email ID: உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும். மின்னஞ்சல் முகவரியை நினைவில் கொள்க எதிர்கால பயன்பாட்டிற்காக தயவுசெய்து Internet cafe/நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியை பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்த வேண்டாம்.
    • Vidyadhan Password: மேற்குறிப்பிட்ட கணக்கிற்கு குறைந்தபட்சமாக 8 இலக்கங்களில் கடவுச்சொல்லை உருவாக்கவும். கடவுச்சொல்லை மறந்து விட வேண்டாம்.
  4. Apply Now” பொத்தானை அழுத்தவும். அழுத்தியவுடன் கணக்கை செயல்படுத்தும் இணைப்பு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
  5. மின்னஞ்சலை திறந்து உங்கள் கணக்கை செயல்படுத்தும் மின்னஞ்சல் கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் “Account is Activated” என்ற செய்தியுடன் வித்யாதன் இணையதளத்திற்கு செல்லும்.
  6. இப்பொழுது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் வித்யாதன் கடவுச்சொல்லை கொண்டு உங்களது கணக்கை துவக்கவும்.
  7. கணக்கை தொடங்கிய பிறகு “Help” என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கும் முறை மற்றும் நடைமுறையில் உள்ள உதவித்தொகைகளின் விவரங்களை தெரிந்து கொள்ளாலம்.
  8. இப்பொழுது “Apply Now ” என்ற லிங்கை கிளிக் செய்து நடைமுறையில் உள்ள வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
  9. விண்ணப்பங்களை நிரப்பிய பிறகு அதை திருத்தம் செய்யலாம்.
  10. தயவுசெய்து உங்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி செய்திகளை தொடர்ந்து கவனிக்கவும். ஏனென்றால் அனைத்து வித்யாதன் செய்திகள் மற்றும் உரையாடல்கள் உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும்.

Apply

Scholarship Online Application

How to Apply – video Demo

Leave a comment

Share Your Thoughts...