பார்வையற்றவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி - enabled.in

பார்வையற்றவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி

பார்வையற்றவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி

Venue :

திருநெல்வேலி N G O சங்கம் (அரசு அலுவலர் ஊழியர் ஒன்றிய கட்டிடம்) , அரவிந்த் கண் மருத்துவமநை எதிரில் திருநெல்வேலி

Date: ஏப்ரல் 28, 2018 9:30AMஏப்ரல் 29, 2018 06:00PM

அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (All India Confederation of the Blind) தொடங்கப்பட்டதிலிருந்து இந்று வரை பார்வையற்றோர் மேம்பாட்டிற்கான பல்வேறு சீரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவது நீங்கள் அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு இடங்களில் பார்வையற்றவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடத்தி அவர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்க வழிவகை செய்கிறது. இதன் தொடர்ச்சியாக வரும் ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் திருநல்வேலி மற்றும் கன்நியாகுமரி மாவட்டத்திலுள்ள பார்வையற்றவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சியினை, திருநெல்வேலி N G O சங்கம் (அரசு அலுவலர் ஊழியர் ஒன்றிய கட்டிடம்) திருநெல்வேலி (அரவிந்த் கண் மருத்துவமநை எதிரில்) நடத்த முடிவுசெய்துள்ளது. இந்த பயிற்சியானது, Christoffel Blindenmission நிதி நல்கையுடன் நடத்தப்படுகிறது. இந்த இரண்டு நாள் பயிற்சியானது தமிழில் மட்டுமே நடைபெறும். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தவறாமல் தங்கள் பெயரை கீழே கொடுக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணை தொடர்புகொண்டோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்ய வேண்டும்.

முதலில் பதிவு செய்யும் 35 பங்கேற்பாளர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்துக்கொள்ள இயலும் என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்பயிற்சியானது பின்வருவனவற்றை நோக்கமாககொண்டு நடத்தப்படும்.

  • பார்வையற்றவர்கள் தொழில்நுட்பத்தை குறிப்பாக ஆண்டிராய்டு மொபைலை சுயமாகவும் சுலபமாகவும் பயன்படுத்துதல்;
  • பார்வையற்றவர்கள் தங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்டு விளங்க தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்துதல்;
  • பேடீயம் (PAYTM) பிம் (bhim)முதலிய செயலிகளை கொண்டு சுயமாகவும் பாதுகாப்பாகவும் பணப்பரிவர்த்தநை செய்தல்;
  • பார்வையற்றோருக்காக உருவாகி இருக்கக் கூடிய பல்வேறு செயலிகளை பதிவிரக்கம் செய்து அவற்றை பயந்படுத்துவதை பற்றி பயிற்றுவித்தல்;.

குறிப்பு:
1. கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு நண்பகல் உணவு மற்றும் தேநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2. கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு தங்கும் வசதி மற்றும் பயணப்படி வழங்கப்பட இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செல்பேசி: 9600 116 996.
மின்னஞ்சல்: Muthump2007@gmail.com
நல்வாழ்த்துகள்

இங்ஙனம்
மு. முத்துச்செல்வி,
செயலாளர் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (AICB)

Leave a comment

Share Your Thoughts...