பார்வையற்ற இளைநர்களுக்கு தலைமைத்துவ மற்றும் ஆளுமைப் பயிற்சி
Date: 24th September, 2016 – 25th September, 2016.
Venue : ICSA Centre , எண் 107, பான்தியன் சாலை, எழும்பூர், சென்னை-600008 தமிழ்நாடு, இந்தியா
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (All India Confederation of the Blind) தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை பார்வையற்றோர் மேம்பாட்டிற்கான பல்வேறு சீரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவது நீங்கள் அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு இடங்களில் பார்வையற்றவர்களுக்கு குறிப்பாக பார்வையற்ற இளைநர்களுக்களிடையே தலைமைத்துவ ஆளுமைப் பயிற்சி நடத்தி அவர்களுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவர்களின் பங்களிப்பை அனைத்து நிலைகளிலும் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 (24.09.2016 மற்றும் 25.09.2016) ஆகிய தேதிகளில் பார்வையற்ற இளைஙர்களுக்கான தலைமைத்துவ மற்றும் ஆளுமைப் பயிற்சியினை சென்னை, ICSA நிறுவநம், எண் 107, பான்தியன் சாலை,எழும்பூர் சென்னை 600008 (ICSA Centre, No .107, Pantheon Road, Egmore, Chennai-600008) நடத்த முடிவுசெய்துள்ளது. இந்த பயிற்சியானது, Christoffel Blindenmission நிதி நல்கையுடன் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பார்வையற்ற இளைஙர்களுக்காக நடத்தப்படும் இரண்டாவது பயிற்சி இது. முதலாவது பயிற்சி இந்தோரில் சென்ற ஜூன் 11 மற்றும் 12 தேதிகளில் நடைப்பெற்றது. இந்த இரண்டு நாள் பயிற்சியானது தமிழில் மட்டுமே நடைபெறும்.
இப்பயிற்சியானது பின்வருவனவற்றை நோக்கமாககொண்டு நடத்தப்படும்:
- பார்வையற்றவர்கள் தங்கள் திறமைகளை கண்டறிந்து தலைமைத்துவப் பன்பை வளர்த்துகொள்ளுதல்
- பார்வையற்றவர்கள் தங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான உரிமைகளுக்காக தாங்களாகவும் தங்கள் அமைப்புடன் இணைந்தும் பல்வேறு வழிகளில் வாதாடுதல்.
- பார்வையற்றொருக்காக செயல்படும் சங்கங்களில் பொறுப்புகளை ஏற்று செயள்படுதல்.
- பார்வையற்றோருக்கு இருக்கக் கூடிய பல்வேறு வேலைவாய்ப்புகளை பற்றிய
விழிப்புணர்வை ஏற்ப்படுத்துதல்.
தமிழ்நாடு அளவில் நடத்தப்படவிருக்கும் இரண்டு நாள் பயிற்சியில் பங்கேற்க தங்கள் அமைப்பைச் சார்ந்த 5 ஆர்வமுடைய உறுப்பினர்களை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பயிற்சியில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வரும் 31.08.2016 க்குள் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Email ID: muthump2007@gmail.com
Instruction
1. கலந்து கொள்ளும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் 24.09.2016 காலை முதல் 25.09.2016 மாலை வரை தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களிலிருந்து கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு மூன்றாம் வகுப்பு ரயில் குளிர்சாதன இருவழி பயண கட்டண சலுகை (AC 3 tier concession train fare) வழங்கப்படும். வெளியூர் பங்கேற்பாளர்கள் தங்கள் பயணச் சீட்டு பிரதியினை எங்களிடம் சமற்பிக்க வேண்டும்.
3. ஐந்து வெளியூர் பங்கேற்பாளர்களுக்கு ஒரு உதவியாளர் உடன் வர அனுமதி வழங்கப்படும்.
Download Application : Youth Workshop Registration Form (DOC, 29KB)
Contact Details
Address
Phone : 9600116996
Email : muthump2007@gmail.com