பேரிடர் காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டுதல் - enabled.in
பேரிடர் காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்

வெள்ள பெருக்கின்போதும், புயலின் போதும் மாற்றுத்திறனாளிகள் தங்களை பாதுகாத்துகொள்வதும், முன்னேற்பாடு செய்வதும் முக்கியமானதாகும். இங்கு அதற்கான வழிமுறைகளை காண்போம்.

முன்னேற்பாடுகள்

  • வானொலியில் செய்திகளை அவ்வப்போது கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
  • தங்களுக்கு எது முக்கியமாக தேவை என்பதை எழுதி வைத்துக்கொள்ளவும்.
  • உங்களுக்கு அருகமையில் உள்ள பாதுகாப்பான இடத்தை தெரிந்து வைத்து கொள்ளவும். ( அரசு வழிகாட்டுதல்படி).
  • மிக அருகமையில் உள்ள இரண்டு அணுகதக்க இடங்களை தேர்ந்தெடுக்கவும்.
  • பிறரை எவ்வாறு தொடர்ப்பு கொள்ள வேண்டும் என்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
  • அரசு உதவி எண்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது தொலைப்பேசியில் பதிவு செய்து கொள்ள வேணடும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான முன்னேற்பாடுகள்

  • சிறிய கையடக்க மன்விளக்குகள் (mini torch light)
  • தண்ணீர்
  • காலணிக்ள
  • காசேலைகள் (ATM தவிர்க்கவும்)
  • தொலைப்பேசிக்கான கூடுதல் பேட்டரி (power bank)
  • காது கேக்கும் கருவிகளுக்கான கூடுதல் பேட்டரி
  • முதலுதவி பெட்டி (first aid box)
  • உணவு (bread and biscuit)
  • காது குறைபாடு உள்ள நபர்கள், நான்கு திசைகளிலும் கவணம் செலுத்தவும்
  • கண் குறைபாடு உள்ள நபர்கள் முன்னேற்பாடாக பாதுகாப்பான இடத்தில் இருப்பது பாதுகாப்பு
  • மின்நாற்காலி(power wheelchair) உள்ளவர்கள் தங்களது நாற்கலிக்கு கூடுதல் பேட்டரி எற்பாடு செய்ய வேண்டும்.
  • மனம் குன்றியவர்கள் தங்களது தினசரி வேலைகளை மாற்றுவது கடினம், அவர்களுக்கு சுழ்நிலையை புரிய வைப்பது நல்லது.
  • சக்கரநாற்காலிகளை தயார்நிலையில் இருக்க வேண்டும்
  • பெற்றோர் தங்களது மாற்றுத்திறனாளி குழந்தைகள் எப்போதும் அருகில் வைத்திருக்க வேண்டும் அல்லது முன்னேற்பாடக அரசு வழிகாட்டும் இடத்தில் தங்க வைக்க வேண்டும்

அவசர உதவி எண்கள்

தலைமை செயலர் கட்டுப்பாட்டு அறை
25671388 / 25670372
தலைமைச் செயலம் EPABX
044 25665566
வருவாய்த்துறை044 25671821
காவல் துறை
100
போக்குவரத்து காவல்
103
ஆம்புலன்ஸ்108
தீயணைப்பு101
தீயணைப்புத்துறை ஆம்புலன்ஸ்
102
குழந்தை நலன்
1098
பெண்கள் உதவி1091

Join the Conversation

1 Comment

Share Your Thoughts...

  1. There’s small correction needed, please don’t mistaken me. Please correct it as soon as possible
    “பேரிடர் காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்”

%d bloggers like this: