2010 – 2011ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற ஜெ. விக்னேஷ்-க்கு 12,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஜி. பிலிக்ஸ்-க்கு 9,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பி. ராஜசேகர், எஸ். நந்தீஷ், பி. சசிகுமார் ஆகியோருக்கு தலா 6,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் ஆர். ஜெயபிரகாஷ்-க்கு 18,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஆர். சரவணன்-க்கு 12,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாம் இடம் பெற்ற மாணவர் எஸ்.கிருஷ்ணகுமார்-க்கு 9,000 ரூபாய் ரொக்கப் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி, கல்வியில் சிறந்த முறையில் முன்னேறி எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்ந்து வாழ்வில் நலன்கள் பல பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், சமூகநலத் துறை அமைச்சர் , தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நல மாநில ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.