மாற்றுத் திறனாளிகளின் சென்னை பிரகடனம் - enabled.in

மாற்றுத் திறனாளிகளின் சென்னை பிரகடனம்

மாற்றுத்திறனாளிகளின் சென்னை பிரகடனம்
img source : marius.sucan.ro

மாற்றுத்திறனாளிகளின் குரலும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமையும் சமூக நீதியே என்று நாம் நம்முடைய பிரகடனத்தை உலகுக்கு தெரிவிக்கிறோம்.

  1. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தள்ளி வைக்கவே பகுக்கவோ இயலாத மாண்புடன் கூடிய மனித உரிமைகளே என்று இந்த தேசத்திற்கு பிரகடனம் தெரிவிக்கிறோம்.
  2. மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு மற்றும் சமவாய்ப்புக்குத் தடையாக உள்ள அனைத்து சாதி, மத, சமூக, பொருளாதார, நிலவியல், உளவியல், கலாச்சார, பண்பாடு, அரசியல், தத்துவார்த்தக் காரணிகளையும் வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் எதிர்த்துப் போராட சபதமேற்கிறோம்.
  3. மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்குரல்களை பொது சமூகத்துக்கு எடுத்துச்செல்லவும், இயைந்த சட்டங்கள், கொள்கைகளை முன்னெடுக்கவும் எங்களுக்கு அரசியல் பங்கேற்பு அவசியமாகிறது. எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியும், சமூகநீதி இயக்கங்களும், தன்னாரவத் தொண்டு நிறுவனங்களும் தங்கள் கொள்கைத் திட்டத்தில் தக்கதென் கருதும் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் தங்கள் அமைப்புகளுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கு கணிசமான விழுக்காடு பங்கேற்பை பாகுபாடின்றி உறுதி செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.
  4. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 15 மற்றும் அதன் உட்பிரிகளில் இயலாமை (Disability) என்கின்ற சொல்லை உள்ளடக்கி, அதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் சமத்துவத்திற்கான உரிமையை அடிப்படை உரிமையாக ஆக்க இந்திய அரசை வலியுறுத்தி கேட்கிறோம்.
  5. மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கு சட்டமன்ற, நாடாளுமன்றத்தில், கொள்கை உருவாக்க அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இணைந்து குரல் கொடுக்குமாறு அனைவரையிம் இப்பிரகடனம் கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் – 1994ல் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாய இடஒதுக்கீடு (சிறப்பு உள்ஒதுக்கீடுகள் உட்பட) வழங்கவும் தமிழக அரசையும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தையும் இப்பிரகடனத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறது.
  6. அனைத்து வகையான மாற்றுத்திறனுடையோரையும் முழு சட்ட தகைமை உடையோராக (Full Legal Capacity as in UNCRPD) அங்கீகரிக்கவும், அவர்களை சட்டத்தின் முன் சமமாக நடத்தவும் இந்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். அதற்கான சட்டமுன் வரைவுகளை (மாற்றுத்திறாளிகளின் பங்கேற்புடன் கூடிய) இயற்றவும் அரசியல் கட்சிகளை கோருகிறாம்.
  7. அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம், மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் அணுகத்தக்கதகவும், எளிதில் பங்கேற்கக்கூடியதாகவும் தேர்த்ல் முறை இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் கண்ணியமான சொற்களை கொண்டே விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. அப்பரிந்துகைளுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றுத்தர அரசியல் கட்சிகளை இப்பிரகடனத்தின் மூலம் கேட்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளின் சென்னை பிரகடனம்
img source : marius.sucan.ro

மேற்கண்ட அம்சங்களை வேன்றெடுப்பதற்கான அனைத்து சட்டப்படியான இயக்கங்கள் முன்னெடுப்புகள், போராட்டங்களுக்கு இணைந்து கரம்கொடுக்குமாறு இந்தியாவில் உள்ள அனைத்து முற்போக்கு அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் , தன்னார்வத்கொண்டு அமைப்புகளையும் தனிமனிதர்களையும் இப்பிரகடனத்தின் மூலம் அறைகூவல் விட்டு அழைக்கிறது. நாட்டுக்கு வெளியே இக்கொள்கைகைளை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு உலகக்குடிமகனையும் இப்பிரகனத்தில் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.


டிசம்பர் 3 இயக்கம்

 

Join the Conversation

2 Comments

Share Your Thoughts...

  1. HI I’m vignesh completed dip in hotel management at ihm looking for a job plse anybody knows inform me

  2. Sir /madam disability person with two years ago @mobile van assistant (consolidated)at promotion after two years onely by ,Antony. S

%d bloggers like this: