மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில்வே இ-டிக்கெட் - enabled.in

மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில்வே இ-டிக்கெட்

மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்: 23 ரயில் நிலையங்களில் இனி பெறலாம்

இ-டிக்கெட் மூலம் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிக்கு புதிய புகைE-ticketing for Differently-Abled Extended to All Railway Zonesப்பட அடையாள அட்டை பெறுவதற்கான படிவங்களை தமிழகத்தின் 23 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தப் படிவங்களை அந்தந்த ரயில் நிலையங்களில் மே 1-ஆம் தேதி முதல் ஜூலை-1 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்தப் படிவங்கள் செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படிவங்கள் சரி பார்க்கப்பட்டு, மூன்று வாரங்களில் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். பின்பு, ரயில்வே கோட்ட அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏன் அடையாள அட்டை?

ரயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வசதியினை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.

இதற்காக மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, வயது வரம்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 2 புகைப் படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவிலும், ரயில் நிலையங்களிலும் அணுக வேண்டும்.

இந்த அடையாள அட்டையை வேறொரு பயணிக்காகப் பயன்படுத்தக் கூடாது. ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படிவங்கள் வழங்கப்படும் ரயில் நிலையங்கள்
அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, ஊட்டி, திண்டுக்கல், விருதுநகர், மானாமதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுச்சேரி.

 

மாற்றுத்திறனாளிகள் இராயில்வே இகார்டு பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள்

  • கார்டு படிவம் – Application form( படிவம் இராயில்வே அலுவலகத்தில் தரப்படும் )
  • இரண்டு புகைப்படங்கள் (Recent passport size photo)
  • சலுகை படிவம் மற்றும் நகலுடன் ( Railway concession form with 2 xerox )
  • முகவரி சான்றிதழ் ( Address proof)
  • அடையாள அட்டை ( Identicard )
  • வயது சான்றிதழ் ( Age Certificate )

மேற்கண்ட ஆவணங்களுடன் அருகிலுள்ள Divisional Railway Manager அனுகவும்.

Download : E-Ticketing Application form(PDF, 26KB)

Leave a comment

Share Your Thoughts...